கண்களை சுற்றியுள்ள கருவளையம் இருந்த இடம் தெரியாமல் போக இதை மட்டும் ட்ரை பண்ணுங்க..!

How to Remove Dark Circles Naturally at Home in Tamil

பொதுவாக கண்களை சுற்றி கருவளையம் வருவதற்கான முதல் காரணம் இரவில் சரியாக தூங்காமல் இருப்பது தான் ஆனால் நான் ஒரு நாளைக்கு ஏழு முதல் எட்டு மணி நேரம் தூங்குகின்றேன். ஆனாலும் எனது கண்களை சுற்றி கருவளையம் உள்ளது. அதனை எவ்வாறு போக்குவது என்று தெரியவில்லை என கவலைப்படுபவரா நீங்கள்..? அப்படி என்றால் இந்த பதிவு உங்களுக்காக தான். ஆம் நண்பர்களே இன்றைய பதிவில் இயற்கையான முறையில் உங்கள் வீட்டில் உள்ள பொருட்களை பயன்படுத்தி எவ்வாறு கருவளையத்தை போக்குவது என்று பார்க்க இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன் பெறுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

How to Remove Dark Circles Under Eyes Permanently in Tamil:

How to Remove Dark Circles Under Eyes Permanently in Tamil

 

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. அதிமதுரப்பொடி – 1 டீஸ்பூன் 
  2. விளக்கெண்ணெய் – 1 டீஸ்பூன் 
  3. தேன் – 1/4 டீஸ்பூன் 

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒன்றுடன் ஒன்று  நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அதனை உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தின் மீது தடவி 1/2 மணி நேரம் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.

இதையும் படித்துப்பாருங்கள்=> ஒரே ஒரு நாள் இரவில் கருவளையம் மறைய சூப்பரான இந்த Face Pack ட்ரை பண்ணுங்க

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையம் விரைவில் மறைவதை நீங்களே காணலாம்.

How to Remove Dark Circles at Home Naturally in Tamil:

How to Remove Dark Circles at Home Naturally in Tamil

முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.

  1. கடுக்காய் பொடி – 1 டீஸ்பூன் 
  2. பால் – 1/2 டீஸ்பூன் 
  3. தேன் – 1/4 டீஸ்பூன் 

மேலே கூறியுள்ள பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து ஒன்றுடன் ஒன்று  நன்கு கலந்து கொள்ளவும். பின்னர் அதனை உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையத்தின் மீது தடவி 15 – 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி கொள்ளவும்.

இதனை தினமும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்கள் கண்களை சுற்றியுள்ள கருவளையம் விரைவில் மறைவதை நீங்களே காணலாம்.

இதையும் படித்துப்பாருங்கள்=> கண்களை சுற்றி உள்ள கருவளையம் மறைய இந்த பொருள் மட்டும் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil