துணிகளில் ஏற்படும் துர்நாற்றத்தை நீக்க
வெயில் காலத்தில் துணிகளை காய வைப்பது பிரச்சனையாக இருக்காது. ஏனென்றால் காய வைத்த 1/2 மணி நேரத்தில் துணிகள் காய்ந்து விடும். ஆனால் மழைக்காலம் மற்றும் பனிக்காலம் வந்துவிட்டால் துணிகள் காயாது. அப்படியே காய்ந்தாலும் அதிலிருந்து துர்நாற்றம் வந்து கொண்டே இருக்கும்.
வீட்டில் இருந்தால் பரவாயில்லை, அதுவே வேலைக்கு செல்கிறவர்களாக இருந்தால் கொஞ்சம் அச்சமாக இருக்கும். ஏனென்றால் அந்த துணியிலிருந்து நாற்றம் வந்து கொண்டே இருக்கும், சரியாக வேலையும் செய்ய முடியாது. அதனால் தான் இந்த பதிவில் துணிகளில் ஏற்படும் துர்நாற்றத்தை தவிர்க்க என்ன செய்யலாம் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
துணிகளை சேகரிக்க வேண்டாம்:
மழைக்காலம் மற்றும் பனிக்காலத்தில் வெயில் நன்றாக அடிக்கட்டும் அதன் பிறகு துணிகளை துவைத்து கொள்ளலாம் என்று சேகரித்து கொண்டே இருக்க கூடாது. பயன்படுத்தியவுடனே துணிகளை துவைத்தால் அதிலிருந்து வரும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
துணிகளில் ஏற்கனவே வியர்வை நாற்றம் இருக்கும், அதனுடனே எல்லா துணிகளையும் சேர்த்து வைத்திருந்தால் பாக்ட்ரியாக்கள் அதிகரிக்கும்.
மழை சீசனில் துணிகளில் கரும்புள்ளி திட்டு திட்டாக வராமல் இருக்க எளிய குறிப்பு
வினிகர் மற்றும் பேக்கிங் சோடா:
ஒரு கப்பில் துணி துவைக்கும் பவுடர், சிறிதளவு பேக்கிங் சோடா, சிறிதளவு வினிகர் சேர்த்து கலந்து கொள்ளவும். இதனை பயன்படுத்தி துணிகளை துவைக்க வேண்டும். ஏனென்றால் இப்படி துவைப்பதினால் துணிகளில் இருந்து வரும் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.
காய வைக்கும் முறை:
துணியை துவைத்த பிறகு அலசும் போது உள்பக்கம் பிரட்டி விட்டு அலச வேண்டும். ஏனென்றால் உள்பகுதியில் தான் வியர்வை மற்றும் அழுக்குகள் இருக்கும். அதனால் உள்பக்கமாக பிரட்டி விட்டு அலசி விடவும்.
அதன் பிறகு துணியை நன்றாக பிழிந்து விட்டு உதற வேண்டும். அதன் பிறகு வெயில் அடிக்கின்ற இடத்தில் வைக்க வேண்டும். ஒருவேளை வெயிலே வரவில்லை என்றால் அதுவரைக்கும் துணியை வெளிபுறம் போட வேண்டும்.
2 மணி நேரம் காய விட வேண்டும், அதன் பிறகு வீட்டின் உள்புறம் எடுத்து வந்து டேபிள் பேனை போட்டு காய வைக்க வேண்டும். நீண்ங்கள் ஆடையை பயன்படுத்தும் போது ஒரு முறை அயர்ன் செய்து பயன்படுத்த வேண்டும்.
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |