30 நாட்களில் முகத்தில் பிம்பிள்ஸ் மற்றும் தழும்புகள் முற்றிலும் மறைய இதை செய்யுங்கள்..!

Advertisement

முகப்பரு தழும்பு விரைவில் மறைய – Mugaparu Thalumbu Maraiya Tips Tamil

How to Remove Pimples Naturally at Home in Tamil – இளம் பருவத்தில் ஹார்மோன் மாறுபாடுகளால் பருக்கள் ஏற்படுவது சகஜமான விஷயம். பொதுவாக இந்த பருவத்தில் நமக்கு வந்த பருக்கள் குறித்து சரியான பராமரிப்புக்களை மேற்கொண்டிருக்கமாட்டோம். மேலும் அப்போது சருமத்தின் மீது அதிக அக்கறை எடுத்து கவனித்திருக்கமாட்டோம். ஆனால் பல ஆண்டுகள் கழித்து, அப்போது ஏற்பட்ட பருக்கள் காரணமாக இப்போது கருமையான தழும்புகள் முகத்தை ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும்.

இந்த முகப்பருக்களினால் முகத்தில் ஆங்காங்கே தழும்புகள் இருக்கும். இந்த தழும்புகளை வெறும் 30 நாட்களில் மறைய செய்ய இங்கு சில டிப்ஸினை பதிவு செய்துள்ளோம் அவற்றை படித்து பாலோ செய்யுங்கள் கண்டிப்பாக முகப்பருக்கள் மற்றும் தழும்புகள் அனைத்தும் மறைந்துவிடும்.

பெண்கள் முகத்தில் உள்ள பரு கரும்புள்ளி மறைய Mugaparu Thalumbu Maraiya Tamil

mugaparu thalumbu maraiya tips tamil

பருக்கள் வந்தால் அதனை தொடாதீர்கள்..! உடைக்காதீர்கள், கிள்ளாதீர்கள், கிழிக்காதீர்கள் அவ்வாறு செய்தால் தோள்களில் உள்ள Collagen என்பதும் செல்கள் இறந்து பெரிய குழி, தழும்பாகவும் மாறிவிடுகிறது..

இந்த Collagen செல்களை உயிர்ப்பிக்க ஆவி பிடிக்க வேண்டும். பின் முகத்தில் உள்ள சதைகளை நன்றாக ஐந்து நிமிடம் மசாஜ் செய்து இலகுவாக ஆக்க வேண்டும்.

தக்காளி, முல்தானி மட்டி, ரோஸ் வாட்டர் இவை மூன்றையும் நன்றாக மிக்ஸியில் அரைத்து, முகத்தில் தடவி வர வேண்டும் இப்படி 30 நாட்கள் செய்தால் கண்டிப்பாக முகப்பருக்கள் தழும்புகள் மறையும்..

தக்காளியில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் முகத்தில் உள்ள ஆயிலை கண்ட்ரோல் செய்யும். Anti-Ageing கொலாஜன் செல்கள் உயிர்ப்பிக்க வழிவகுக்கும்.

தினமும் சீரகத் தண்ணீர் நான்கு லிட்டர் கட்டாயமாக குடிக்க வேண்டும்.

இரத்தம் சுத்திகரிப்புக்காக தினமும் ஆப்பிள், கேரட், பீட்ருட் ஜூஸ் குடிக்க வேண்டும்.

ஐஸ் க்யூபுகளை முகத்தில் வைத்து தடவி தினமும் இரண்டு நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கருப்பான உதடுகள் உள்ளதா? ஆண்கள் பெண்கள் இருவருமே இதை ட்ரை பண்ணுங்க

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement