துருவை நீக்குவது எப்படி..?
நம்முடைய வீட்டில் நமக்கு தேவைப்படும் பொருட்களை வாங்கி கொண்டு பயன்படுத்துவோம். அத்தகைய பொருட்கள் அனைத்தும் வாங்கும் போது புதுசு போல இருந்தாலும் கூட நாளடைவில் பழையது போல மாறி விடுகிறது. மேலும் இதோடு மட்டும் இல்லாமல் சில பொருட்கள் துரு பிடிக்கவும் ஆரம்பித்து விடுகிறது. சாதாரண அடிப்பிடித்த பாத்திரத்தையே சுத்தம் செய்வது என்பது கடினமாக இருக்கும் போது துரு பிடித்த பொருளை மட்டும் எப்படி எளிமையாக சுத்தம் செய்வது..? என்ற கேள்வி நமக்குள் தோன்றும். அதிலும் குறிப்பாக பார்த்தால் பாத்ரூம்களில் உள்ள பைப்புகள் அனைத்தும் மிக விரைவாக துரு பிடிக்க ஆரம்பித்து விடும். அதனால் இன்று பாத்ரூம் பைப்புகளில் உள்ள துரு பிடித்த கரையினை எவ்வாறு நீக்குவது என்று பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How to Remove Rust From Toilet Pipe:
அனைவருடைய வீட்டிலும் பாத்ரூம் மற்றும் டாய்லெட்டில் இருக்கும் தண்ணீர் குழாய்கள் ஆனது குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு துருப்பிடிக்க ஆரம்பித்து விடும். இனி நீங்கள் இவற்றை சுத்தம் செய்வதற்காக கஷ்டப்பட வேண்டும். ஏனென்றால் அதற்கான கிளீனிங் டிப்ஸை பார்க்கலாம் வாங்க..!
- எலுமிச்சை சாறு
- பேக்கிங் சோடா
- ஷாம்பு அல்லது வினிகர்
எப்போதும் பிரிட்ஜ் புதியது போல இருக்க இப்படி சுத்தம் செஞ்சாலே போதும்
துருவை சுத்தம் செய்யும் முறை:
முதலில் ஒரு பவுலை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக்கொள்ள வேண்டும். பின்பு இந்த இரண்டினையும் 2 நிமிடம் கலந்து கொள்ளுங்கள்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள ஜெல்லை பாத்ரூம் பைப்புகளில் உள்ள துரு பிடித்த குழாய்களின் மீது நன்றாக ஸ்கிரபர் வைத்து துடைத்து விட்டு 15 நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள்.
15 நிமிடம் கழித்து கடைசியாக 1 ஸ்பூன் வினிகர் அல்லது ஷாம்பு எடுத்துக் கொள்ளவும். பின்பு இதனை ஸ்கிரபரால் துருப்பிடித்த குழாயின் மீது நன்றாக தேய்த்து அழுத்தி துடைக்க வேண்டும்.
இவ்வாறு செய்த பிறகு தண்ணீர் கொண்டு பைப்பு குழாயினை சுத்தம் செய்தால் போதும் துருப்பிடித்த பைப் பளிச்சென்று மாறிவிடும்.
பயன்கள்:
நீண்ட நாட்களாக துருப்பிடித்த கறையினை நீக்க முடியாமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்த நமக்கு எலுமிச்சை மற்றும் பேக்கிங் சோடாவின் கலவை ஆனது மிகவும் பயன்படுகின்ற ஒன்றாக உள்ளது.
மேலும் இந்த இரண்டு கலவையில் இருந்து கிடைக்கூடிய ஜெல் எப்பேர்ப்பட்ட கறைகளையும் நீக்கி விடும்.
Induction Stove-யை இது போல் பராமரித்தால் ஆயுள் வரைக்கும் ரிப்பேர் ஆகாது..
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |