5 நிமிடத்தில் பழைய துருப்பிடித்த பாத்திரத்தை புதியது போல மாற்ற இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How to Remove Rust From Vessels in Tamil

அனைவருடைய வீட்டிலும் பாத்திரங்கள் உபயோகிப்பது உண்டு. அந்த பாத்திரங்கள் அனைத்தும் பயன்படுத்த பயன்படுத்த பழையது போல மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் அந்த மாதிரி ஆகாமல் இருக்க நாம் எப்போதும் பாத்திரங்களை வித விதமான முறையில் சுத்தம் செய்து பார்த்து கொண்டே தான் இருப்போம். அதிலும் சாதாரண பாத்திரங்களை விட துரு பிடித்த பாத்திரத்தை சுத்தம் செய்வது என்பது மிகவும் கஷ்டமான வேலை. அதனால் எப்படிப்பட்ட துரு பிடித்த பாத்திரத்தையும் 5 நிமிடத்தில் புதியது போல பளபளக்க செய்வதற்கு இன்றைய பதிவு மிகவும் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl

துரு கறை நீங்க:

 

தேவையான பொருட்கள்:

  1. தண்ணீர்- 1/2 லிட்டர்
  2. பேக்கிங் சோடா- 2 ஸ்பூன்
  3. உப்பு- 2 ஸ்பூன்
  4. அலுமினிய தாள்- சிறிய துண்டு

துரு கறை நீங்க என்ன செய்வது..?

முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தில் 1/2 லிட்டர் அளவிற்கு தண்ணீர் ஊற்றி நன்றாக தண்ணீரை கொதிக்க விடுங்கள். தண்ணீர் நன்றாக கொதித்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு சிறிது நேரம் தண்ணீரை ஆற விடுங்கள்.

அதன் பிறகு கொதிக்க வைத்துள்ள தண்ணீர் மிதமான சூட்டில் இருக்கும் போது  பிளாஸ்டிக் டப்பாவில் அந்த நீரை பாதி அளவு ஊற்றி கொண்டு அதன் மேலே அலுமினிய தாளினை பொறுமையாக வைய்யுங்கள்.

அடுத்து அலுமினிய தாள் வைத்து இருப்பதன் மேல் 2 ஸ்பூன் பேக்கிங் சோடா மற்றும் 2 ஸ்பூன் உப்பு போட்டு சிறிது நேரம் கரைய விடுங்கள்.

கடைசியாக தண்ணீரில் உள்ள பொருட்கள் அனைத்தும் கரைந்த பிறகு உங்கள் வீட்டில் இருக்கும் துருப்பிடித்த பாத்திரங்களை உங்களுடைய கையினை உபயோகப்படுத்தாமல் அந்த தண்ணீரின் உள்ளே போட்டு சிறிது நேரம் கழித்து  வெளியே எடுத்து விடுங்கள்.(குறிப்பு: பேக்கிங் சோடா மற்றும் உப்பு அலுமினிய தாளுடன் சேர்ந்து இருப்பதால் அந்த தண்ணீரில் கையினால் பாத்திரங்களை உபயோகப்படுத்த கூடாது)

தண்ணீரை விட்டு வெளியே எடுத்த பாத்திரங்களை பார்த்தால் பழைய துரு பிடித்த பாத்திரம் போல் தெரியாது அந்த அளவிற்கு புதியது போல பளபளக்கும். 

இதையும் படியுங்கள்⇒ வாஷிங் மெஷின் சுத்தம் செய்வதில் இந்த Idea மட்டும் தெரிஞ்சா போதும் உங்களுக்கு கஷ்டமே இருக்காது..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement