வேகவைத்த முட்டையை உடையாமல் தோல் உரிக்க 4 சூப்பரான டிப்ஸ்

Advertisement

How to Remove Shell from Hard Boiled Egg in Tamil

வணக்கம் நண்பர்களே.. இன்று சமையல் டிப்ஸில் நாம் பார்க்க இருப்பது என்னவென்றால் அவித்த முட்டையை உடையாமல் தோல் உரிப்பது எப்படி என்பதை பற்றி தான் நாம் இந்த பதிவில் பார்க்க போகிறோம். சில நேரங்களில் அவித்த முட்டையின் தோலை உரிக்கும் போது முட்டையும் அந்த தோலுண்ட  உடைந்து ஒட்டிக்கொள்ளும், பிறகு அந்த முட்டையை வீட்டில் உள்ளவர்களிடம் வைக்கும்போது. உடைந்த முட்டை எனக்கு வேண்டாம் முழு முட்டைதான் வேண்டும் என்று சண்டை கூட போட்டுக்கொள்வார்கள். அவர்களை சமாதானம் செய்து சாப்பிட வைப்பது என்பது மிகவும் கடின வேலையாக இருக்கும். அதேபோல் வீட்டில் விருந்தினர் வந்து உணவருந்தும் போது உடைந்த முட்டையை வைப்பதற்கும் தயக்கமாக இருக்கும். பலருடைய பிரச்சனையை சரி செய்யும் வகையில் இங்கு வேகவைத்த முட்டையை உடையாமல் தோல் உரிக்க 4 சூப்பரான டிப்ஸை பற்றி இப்பொழுது நாம் பார்க்கலாம் வாங்க.

அவித்த முட்டை உடையாமல் உரிக்க டிப்ஸ் 

டிப்ஸ்: 1

முட்டையை 10 நிமிடம் நன்கு வேகவைத்த பிறகு ஒரு டம்ளரை எடுத்துக்கொள்ளுங்கள், அவற்றில் ஒரு அவித்த முட்டையை போட்டு உங்கள் கைகளால் மூடி, ஒரு இரண்டு மூன்று முறை நன்றாக குளிக்கிக் கொள்ளுங்கள். பிறகு முட்டை ஓடுகளை எடுத்தால் மிகவும் சுலபமாக முட்டை உடையாமல் வந்துவிடும். இது போன்று மற்ற முட்டைகளையும் தோல் உரித்துக்கொள்ளுங்கள்.

டிப்ஸ்: 2

அவித்த முட்டையை எடுத்து கொள்ளுங்கள், அவற்றை சுத்தமாக தரையில் இரண்டு முறை லேசாக தட்டிக்கொள்ளுங்கள், பிறகு தரையில் முட்டையை வைத்து உங்கள் உள்ளங்கைகளால் முட்டையை லேசாக உருட்டிவிடுங்கள், பிறகு முட்டையை தோலை உரிக்கும் போது தோல் நன்றாக உரிந்து வரும்.

டிப்ஸ்: 3

முட்டையை வேக வைத்த பிறகு அதனை ஒரு குழி கரண்டியில் எடுத்து கொள்ளுங்கள். பிறகு குழி கரண்டியை உங்கள் உள்ளங்கையால் முடி இரண்டு முறை குளிக்கி விடுங்கள் அவ்வளவு தான், பிறகு முட்டையின் தோலை உரித்தால் தோல் தனியாக மற்றும் முட்டை உடையாமல் வந்துவிடும்;

டிப்ஸ்: 4

முட்டையை வேகவைத்த பிறகு அவற்றில் இருக்கும் தண்ணீர் நன்கு ஆரிய பிறகு முட்டையை உரித்தால்  முட்டை ஓடு உடையாமல் தனியாக வந்துவிடும்.

இந்த நன்கு டிப்ஸில் ஏதாவது ஒன்றை ட்ரை செய்தாலே போதும் முட்டை உடையாமல் உரிந்து வந்துவிடும்.

இதையும் கிளிக் செய்து படிக்கலாம் 👇
வாழைப்பழ தோலை இப்படியெல்லாம் பயன்படுத்தலாமா? இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement