பிரிட்ஜில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்க இதை ட்ரை பண்ணுங்க..!

Advertisement

How To Remove Smell From Fridge Naturally in Tamil

நாம் பயன்படுத்தும் அத்தியாவசியமான தேவைகளில் குளிர்சாதனபெட்டியும் ஒன்றாகி விட்டது. இப்போது பெரும்பாலும் அனைவரது வீட்டிலும் குளிர்சாதனபெட்டி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அனைவரும் குளிர்சாதனப்பெட்டியை பயன்படுத்தினால் மட்டும் போதாது அதனை சுத்தமாகவும் நறுமணத்துடனும் வைப்பது அவசியம். பிரிட்ஜில் நாளடைவில் துர்நாற்றம் வீசும். எனவே இதனை தடுக்க சில எளிய குறிப்புகளை இப்பதிவில் குறிப்பிட்டுள்ளோம். பொதுவாக நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்தால் பிரிட்ஜில் உள்ள ஐஸ்கட்டிகள் உருகி தண்ணீர் கசிய ஆரம்பித்து விடும். இத்தண்ணீர் பிரிட்ஜில் உள்ள பொருட்களில் கசிந்து தேங்கி நிற்கும். இதனால் துர்நாற்றம் வீசும். இதுபோன்ற பல காரணங்களால் பிரிட்ஜில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பிரிட்ஜில் இருந்து வரும் துர்நாற்றத்தை போக்கக்கூடிய சில குறிப்புகளை பற்றி பின்வருமாறு பார்க்கலாம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

குளிர்சாதனப்பெட்டியை சுத்தம் செய்யும் முன் குளிர்சாதனபெட்டிற்கு வரும் மின்சாரத்தை அணைக்கவும். மேலும் பிரிட்ஜை சுத்தம் செய்வதற்கு எந்தவொரு சோப்புகளையும் பயன்படுத்த கூடாது. அவ்வாறு செய்தால் குளிர்சாதனப்பெட்டி விரைவில் பழுதடைய வாய்ப்புள்ளது.

How To Remove Odor From Fridge in Tamil:

பேக்கிங் சோடா:

 how to remove smell from fridge naturally in tamil

பேக்கிங் சோடா துர்நாற்றத்தை நீக்கும் தன்மை கொண்டது. ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் மற்றும் பேக்கிங் சோடாவை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். இப்போது இத்தண்ணீரில் ஒரு துணியை நனைத்து பிரிட்ஜில் உள்ள தட்டுகளை துடைத்து சுத்தம் செய்து விடுங்கள். மேலும், ஒரு கிண்ணத்தில் சிறிதளவு பேக்கிங் சோடாவை சேர்த்து பிரிட்ஜினுள் 24 மணிநேரம் வைத்து பிறகு அதனை எடுத்து விடுங்கள்.

இவ்வாறு செய்வதன் மூலம் பேக்கிங் சோடா, பிரிட்ஜில் உள்ள துர்நாற்றத்தை உறிஞ்சி வெளியேற்றுகிறது.

ஒயிட் வினிகர்:

 how to remove smell from fridge lemon in tamil

ஒயிட் வினிகர் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் கிருமிகளை அளிக்கும் தன்மை கொண்டது. எனவே ஒரு கப் வினிகரை குளிர்சாதனப்பெட்டியில் திறந்து வைப்பதன் மூலம் பிரிட்ஜில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

வீட்டில் உள்ள அழுக்கு படிந்த சோபாவை சுத்தம் செய்வது எப்படி..

எலுமிச்சை சாறு:

 how to get rid of fridge smell fast in tamil

எலுமிச்சை சாற்றில் ஒரு காட்டன் துணியை நனைத்து குளிர்சாதனப்பெட்டியில் ஒரு இடத்தில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் பிரிட்ஜில் உள்ள துர்நாற்றம் நீங்கும்.

காஃபி பவுடர்:

 what to use to remove bad smell from fridge in tamil

காஃபி பவுடர் இயற்கையாகவே நறுமணம் தரக்கூடிய பொருள். எனவே சிறிதளவு காஃபி பொடியை பிரிட்ஜில் வைப்பதன் மூலம் துர்நாற்றத்தை நீக்கலாம்.

2 முறை சுத்தம் செய்தல்:

 how to remove food odor from fridge in tamil

குளிர்சாதனப்பெட்டியை வாரத்திற்கு இரண்டு முறை கட்டாயம் சுத்தம் செய்ய வேண்டும். பிரிட்ஜில் இருக்கும் அழுகிய பொருட்களை எடுத்து விட வேண்டும். மேலும் ஒவ்வொரு பொருளையும் தனித்தனியான கவரில்போட்டு வைப்பது அவசியம். இவ்வாறு செய்வதன் மூலம் பிரிட்ஜில் துர்நாற்றம் ஏற்படுவதை தடுக்கலாம்.

எக்ஸாஸ்ட் ஃ பேனில் உள்ள எண்ணெய் பிசுபிசுப்பை எளிதில் சுத்தம் செய்ய வேண்டுமா..  அப்போ இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க..

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil
Advertisement