How to Remove Stain from White Clothes at Home in Tamil
இன்றைய சூழலில் பெண்கள் இந்த சமூகத்தில் உள்ள அனைத்து துறைகளிலும் பற்பல சாதனைகளையும் வெற்றிகளையும் செய்து கொண்டும் அடைந்து கொண்டும் இருக்கின்றார்கள். அப்படி பல சாதனைகளை படைத்த பெண்கள் கூட வீட்டில் உள்ள வேலையை செய்வதற்கு மிகவும் கஷ்டப்படுவார்கள் அல்லது பயப்படுவார்கள். ஏனென்றால் பொதுவாக நாம் நமது வீடுகளில் உள்ள இல்லத்தரசிகளே பார்த்தாலே நமக்கு தெரியும் ஏனென்றால் இல்லத்தரசிகள் காலை எழுந்தது முதல் இரவு படுக்கைக்கு செல்வதற்கு வரை அதிக அளவு வேலைகளை செய்து கொண்டே தான் உள்ளார்கள்.
அதிலும் அவர்கள் பார்க்கின்ற சில வேலைகள் எல்லாம் மிக மிக கடினமான வேலையாக இருக்கும். அப்படி அவர்களுக்கு மிக கடினமான வேலை என்றால் அது துணி துவைப்பது தான். அதிலும் துணி துவைக்கும் பொழுது ஒரு அடையில் உள்ள சாயம் மற்றொரு அடையில் படிந்து கொண்டால் அதனை போக்குவது இன்னும் சிரமம். அதிலும் குறிப்பாக அது வெள்ளை நிற ஆடை என்றால் நமது பாடு பெரும்பாடாகிவிடும். அதனால் தான் இன்றைய பதிவில் வெள்ளை சட்டையில் படிந்துள்ள சாய கறையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
வெள்ளை சட்டையில் கறை எடுப்பது எப்படி.?
பொதுவாக வெள்ளை நிற அடையில் மற்ற ஆடைகளின் நிறம் ஒட்டி கொள்வது என்பது மிகவும் சகஜமான ஒரு விஷயம் தான். அதனை போக்குவதற்குள் நமக்கு தான் பெரிய பிரச்சனை ஆகிவிடும்.
அதனால் தான் வெள்ளை சட்டையில் படிந்துள்ள சாய கறையை போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
வெள்ளை துணிகளில் மஞ்சள் கறை நீங்க இனி கஷ்டப்பட வேண்டாம் இதை ட்ரை செய்தாலே போதும்
தேவையான பொருட்கள்:
- கல் உப்பு – 1 கைப்பிடி அளவு
- வினிகர் – 2 டேபிள் ஸ்பூன்
- சலவைத்தூள் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி நன்கு சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின்னர் அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 கைப்பிடி அளவு கல் உப்பு, 2 டேபிள் ஸ்பூன் வினிகர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் சலவைத்தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பிறகு அதில் நாம் துவைக்க வேண்டிய வெள்ளை துணியை அதில் சேர்த்து 1 மணிநேரம் நன்கு ஊறவிடுங்கள். பின்னர் அதனை எடுத்து லேசாக தேய்த்தாலே போதும் அதில் உள்ள அனைத்து கறைகளும் நீங்கி அது பளிச்சென்று மாறுவதை நீங்களே காணலாம்.
துணிகளில் படிந்துள்ள கருப்பு நிற புள்ளிகளை போக்குவது எப்படி
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |