நீங்கள் சமைக்கும் சாப்பாடு கருகிப் போகிவிட்டதா இனி கவலை வேண்டாம் இந்த ஒரு டிப்ஸ் போதும்..!

how to remove burnt smell from dal

சமையல் செய்தல்

ஹாய் நணபர்களே..! இன்றைய பொதுநலம். காம் பதிவில் சாப்பாடு சமைக்கும் போது சாப்பாடு கருகிப் போய்விட்டால் உடனே என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துகொள்ள போகிறோம். மூன்று வேளையும் சாப்பாடு சமைத்தல் என்பது அவ்வளவு எளிது அல்ல. அப்படி நாம் சமைக்கும் சாப்பாட்டை அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று தான் சமைக்கும் தாய்மார்கள் விரும்புகின்றனர். அது மாதிரி சமைக்கும் போது திடீரென சில நேரம் சாப்பாடு கருகிப் போகும் வாய்ப்பு எல்லோர் வீட்டிலும் இருக்கிறது. அப்படி சாப்பாடு கருகிப் போனால் உடனே நீங்கள் என்ன செய்ய செய்வது என்று நீங்கள் கவலை படவேண்டாம். அந்த சாப்பாடை எப்படி சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து பயன் பெறுங்கள்.

இதையும் படியுங்கள்⇒ இட்லி மாவு அரைக்கும் போது இதை மட்டும் செய்யுங்கள்                      இட்லி மாவு பக்குவம் தவறாது..!

சமைக்கும் சாப்பாடு கருகிப் போய்விட்டால் உடனே நீங்கள் செய்ய வேண்டியவை:

சமையல் பாத்திரம்:

நீங்கள் உணவு சமைக்கும் போது பாத்திரத்தின் அடிப்பகுதி கருகிப் போயிருந்தால் உடனே நீங்கள் சமைக்கும் பாத்திரத்தை மாற்றுவது நல்லது.

கருகிப் போன சாப்பாட்டில் அமில பொருட்களை சேர்த்தல்:

நீங்கள் சமைக்கும் போது உணவு கருகிப் போய்விட்டால் உடனே அமில பொருட்களை சேர்த்து சாப்பாட்டின் சுவையை சரி செய்ய முடியும். நீங்கள் சமைக்கும் சாப்பாட்டை பொறுத்து எலுமிச்சை சாறு, வினிகர், தக்காளி இது போன்ற பொருட்களை நீங்கள் உணவில் சேர்க்கலாம்.

கருகிப்போன உணவின் சுவையை மாற்றுவது எப்படி:

கருகிப் போன உணவின் சுவையை சரி செய்வதற்கு உங்கள் வீட்டில் இருக்கும் சில பொருட்கள் மட்டும் போதும். அது என்னென்ன பொருட்கள் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

உருளைக்கிழங்கு:

உருளைக்கிழங்கு பொதுவாக கருகிப் போன உணவின் சுவையையும் மாற்றுவதற்கு பயன்படுகிறது. அதனால் உருளைக்கிழங்கை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கருகிப் போகிறுக்கும் உணவுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடுங்கள். அதன் பிறகு உருளைக்கிழங்கை அகற்றி விடுங்கள். இது மாதிரி செய்தால் உணவின் தீஞ்ச வாசனை மாறிவிடும்.

பால் பொருட்கள்:

சமைக்கும் போது உணவு கருகி இருந்தால் பால் அல்லது தயிர், வெண்ணெய், கிரீம் இதுபோன்ற பால் பொருட்களை கருகிப் போன உணவில் சேர்க்கலாம். இப்படி செய்தால் உணவில் கருகிப் போன வாசனை இருக்காது. இந்த பொருட்களை குழம்பு மற்றும் கறி இந்த வகையான சாப்பாட்டிற்கு மட்டுமே பயன்படுத்தப் படுகிறது.

இலவங்கப்பட்டை:

உணவின் வகைகளை பொறுத்து கருகிப் போன சாப்பாட்டிற்கு அரைத்த இலவங்கப் பட்டையை பயன்படுத்தலாம். கறிகள், காரமான உணவு மற்றும் இனிப்பு உணவு இதுபோன்ற உணவுகளுக்கு அரைத்த இலவங்கப் பட்டைய பயன்படுத்தும் போது உணவில் கருகிய வாசனை போகிவிடும்.

தக்காளி சாஸ்:

சமைக்கும்போது உணவு கருகிப்போனால் உணவின் சுவையை சமநிலை படுத்துவதற்கு சாஸ்களை உணவில் சேர்க்கலாம். சாஸில் காரம் மற்றும் இனிப்பு சுவை இருப்பதால் இது கருகிப் போன உணவின் சுவையை சமநிலையாக  மாற்றிவிடும்.

காய்கறி, இறைச்சி இதுபோன்ற ஏதேனும் உணவுகள் சமைக்கும்போது கருகிப் போனால் உடனே நீங்கள் கருகிப் போன உணவின் முழு பகுதியையும் அகற்றிவிடவும். இது மாதிரி செய்தால் முழு உணவும் கருகிப் போகாமல் தவிர்க்க முடியும்.

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉Tips in Tamil