கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீராமல் இருக்க இத பண்ணாலே போதும்!

How to Save Gas Cylinder in Tamil

கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீராமல் இருக்க என்ன செய்யலாம்? | How to Save Gas Cylinder in Tamil

How to Save Gas Cylinder in Tamil – வணக்கம் நண்பர்களே.. இந்த பதிவு கேஸ் சிலிண்டரை பயன்படுத்தும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கேஸ் சிலிண்டர் நமது அன்றாட வாழ்வில் மிகவும் அத்தியாவசிய பொருளாக மாறிவிட்டது. இதன் காரணமாகவே நாளுக்கு நாள் கேஸ் சிலிண்டர் விலை அதிகரித்து கொண்டே போகிறது.  ஆக நாம் அனைத்தை சிக்கனமாக பயன்படுத்தினோம் என்றாலே கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீராமல் இருக்கும். நாம் செய்யும் கொஞ்ச கொஞ்ச தவறுகளை திருத்திக்கொண்டோம் என்றாலே கேஸ் சிலிண்டர் சீக்கிரம் காளியாக்குவதை தடுக்க முடியும். அப்படி நாம் என்ன தவறுகளை செய்து வருகிறோம். எப்படி அதை சரி செய்வது என்பதை பற்றி இந்த பதிவில் நாம் தெளிவாக படித்தறியலாம் வாங்க.

கேஸ் சிலிண்டர் சீக்கிரம் தீராமல் இருக்க இத பண்ணாலே போதும்!

பர்னர்:

கேஸ் அடுப்பில் உள்ள பர்னர் எப்பொழுதுமே அழுக்குகள் படியாமல், சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால் கேஸ் ஸ்டவ் பர்னரில் அழுக்குகள் அதிகம் இருந்தால் பிறகு அடைப்பு பிரச்சனை ஏற்படும், இதன் காரணமாக கேஸ் சிலிண்டரில் வேஷ்டாக்க கேஸ் லீக் ஆகும். இதனால் சீக்கிரமாகவே கேஸ் சிலிண்டர் தீர்ந்துவிடும். ஆக பர்னரை எப்பொழுதும் சுத்தமாக வைத்து கொள்ளுங்கள்.

தட்டையான பாத்திரம்:

பொதுவாக கேஸ் அடுப்பில் சமைக்கும் போது குழியாக உள்ள பாத்திரத்தை பயன்படுத்தாமல், பாத்திரத்தின் அடி பகுதியில் தட்டையாக இருக்கும் பாத்திரத்தை பயன்படுத்தி சமைத்தால் கேஸ் அடுப்பில் இருந்து வரும் தீ அந்த பாத்திரத்தில் சமமாக படும். இதனால் சமையலுக்கு பயன்படுத்தியுள்ள பொருட்கள் மிக சீக்கிரமாகவே வெந்துடும். ஆக உங்கள் கேஸ் மிச்சமாகும், இதனால் நீண்ட நாட்கள் வரை உங்கள் கேஸ் சிலிண்டரை பயன்படுத்தலாம்.

அதேபோல் பாத்திரத்தை ஈரத்துடன்  வைத்து சமைப்பார்கள் சிலர், இப்படி செஞ்சீங்க அப்படின்னா கேஸ் சிலிண்டர் தான் சீக்கிரம் தீர்ந்து போகும். எப்படின்னு தான யோசிக்கிரங்க. ஆமாங்க ப்ரண்ட்ஸ் இந்த பாத்திரத்தில் உள்ள ஈரம் காய்வதற்கு எப்படியும் 5 நிமிடங்கள் ஆகும்,. அதன்பிறகு சமைக்க ஆரம்பிப்பீர்கள் ஒரு நாள் என்றால் பரவா இல்லை தினமும் அப்படி செஞ்சீங்க அப்படின்னா நீங்கள் யோசித்து பாருங்கள் எவ்வளவு கேஸ் வேஸ்ட்டாக தீர்ந்து போகிறது என்று.

சமைக்கும் முறை:

நீங்கள் என்ன சமைத்தாலும் சரி அதனை மூடி போட்டு சமைத்தால் வெகு சீக்கிரமாகவே காய்கறிகளாக இருந்தாலும் சரி, அரிசியாக இருந்தாலும் சரி வெகு சீக்கிரம் வெந்துவிடும்.

அதேபோல் அரிசி, பருப்பு, பயிர் வகைகள் இது போன்ற உணவு பொருட்களை சமைப்பதற்கு 1/2 மணி நேரத்திற்கு முன் ஊறவைத்து சமைத்தால். அந்த பொருட்கள் வெகு சீக்கிரமாகவே வெந்துவிடும். இதனால் கேஸ் மிச்சமாகும்.

மட்டன்:

பொதுவாக ஆட்டு கறியை வேக வைப்பதற்கு அதிக நேரம் ஆகும். ஆக கறியை வேகவைக்கும் போது அவற்றில் சிறிதளவு கொட்டாங்குச்சியை அதில் உடைத்துப்போட்டு வேகவைத்தீர்கள் என்றால் ஆட்டுக்கறி வெகு சீக்கிரமாகவே வெந்துவிடும். ஆக இந்த ட்ரிக்கை ட்ரை செய்து கேஸ் சிலிண்டரை மிச்சம் செய்யுங்கள்.

பிரிட்ஜில் இருந்து உடனே பொருட்களை பயன்படுத்த வேண்டாம்:

பொதுவாக எல்லார் வீட்டிலேயும் இப்பொழுது பிரிட்ஜ் இருக்கும் அவற்றில் காய்கறி மற்றும் சமையலுக்கு தேவையான பொருட்களை வைத்து பயன்படுத்துவீர்கள். ஆனால் பிரிட்ஜியில் இருந்து உடனே சமையல் பொருட்களை எடுத்து பயன்படுத்த வேண்டாம், ஏனென்றால் அந்த பொருள் அதிக அளவு குளிர்ச்சியாக இருக்கும். ஆக நாம் சமைக்கும் போது அந்த குளிர்ச்சி தன்மை போக சிறிது நேரம் எடுத்துக்கொள்ளும். அதன் பிறகு அந்த பொருள் வேகுவதற்கு கொஞ்சம் நேரம் டைம் எடுத்துக்கொள்ளும். ஆக இந்த தவறை தினமும் செய்தோம் என்றால் கேஸ் சிலிண்டர் தான் வேஸ்ட் ஆகும். ஆகி இந்த தவறையும் தவிர்த்து கொள்ளுங்கள். சமைப்பதற்கு முன் அந்த பொருளை பிரிட்ஜியில் இருந்து 1/2 நேரத்திற்கு முன் எடுத்து வைத்து சமைப்பதற்கு பயன்படுத்துங்கள்.

சமைப்பதற்கும் பிளானிங் தேவை:

நம்ம வடிவேலு சார் சொல்லி இருப்பது போல், எதை செய்தாலும் பிளான் செய்தான் செய்ய வேண்டும். அது சமையலுக்கும் பொருந்தும். இரண்டு நபர் சாப்பிடும் அளவிற்கு சமைக்க போறீங்க அப்படின்னா, அதற்கேற்ற அளவிற்கு தான் சமையல் பொருட்களையும், சமையல் பாத்திரங்களையும் பயன்படுத்த வேண்டும். இரண்டு நபர் சாப்பிடும் அளவை விட அதிகமான பொருட்களை சமைப்பதற்கு பொருட்கள் மற்றும் பாத்திரங்களை பெரிதாக பயன்படுத்தினால் கேஸ் தான் வேஸ்ட் ஆகும். அந்த சமையல் பொருளும் வேஸ்ட் ஆகிடும்.

டிப்ஸ் | How to Save Gas Cylinder in Tamil:

சமைக்கும் போது சமையலை மட்டும் பண்ணுங்கள் டிவி பார்த்து கொண்டு, மொபைல் யூஸ் செய்துகொண்டு சமைக்காதீர்கள் இதனாலும் கேஸ் சிலிண்டர் வேஸ்ட் ஆகும். ஏன் இப்படி சொல்றன்னு உங்களுக்கு தெரிந்திருக்கும்.

அதுபோக சமைக்கும் போது சமைப்பதற்கு தேவைப்படும் அனைத்து பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக்கொண்டு சமையுங்கள். கேஸ் அடுப்பை ஆன் செய்து விட்டு பிறகு சமைப்பதற்கான பொருளை தேடாதீர்கள்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 4 சொட்டு போதும் ஈ தொல்லை இனி வீட்டில் இருக்காது..! ஒரு முறை ட்ரை செய்து பாருங்கள்..!

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil