How To Save Gold in Tamil
இன்றைய கால கட்டத்தில் தங்கத்தை சேமிப்பது கஷ்டமான ஒன்றாக இருக்கிறது. பணக்காரர்களுக்கு தங்கம் விலை ஏறினாலும் பிரச்சனையில்லை, இறங்கினாலும் கவலை படமாட்டார்கள். ஏனென்றால் அவர்கள் நினைத்த உடனே தங்கத்தை வாங்கி கொள்வார்கள். ஆனால் சாமானிய மக்களால் தங்கம் வாங்குவதற்கு பணத்தை கால கணக்கில் சேமித்து வைப்பார்கள். சில நபர்களுக்கு எப்படி சேமிப்பது என்று தெரியாது, அதனால் தான் அவர்களுக்கு உதவும் வகையில் இன்றைய பதிவில் தங்கத்தை எப்படி சேமிப்பது என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
தங்கத்தை சேமிப்பது எப்படி தெரியுமா.?
டிப்ஸ்:1

இன்றைய கால கட்டத்தில் தங்கத்தை வாங்குவது பெரும் போராட்டமாக இருக்கிறது. முதல் ஐடியாவாக நகை கடையில் நகை சீட்டு போட வேண்டும். இதில் நீங்கள் மாதம் பணத்தை செலுத்தி ஒரு வருடத்திற்குள் அந்த பணத்திற்கான நகையை பெற்று கொள்ளலாம். குறைந்தபட்சம் தொகையாக 500 ரூபாய் முதல் அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானலும் செலுத்தலாம்.
தங்கம் விலை இன்றைய நிலவரம் 2023
டிப்ஸ்:2
என்னால் மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையினை செலுத்த முடியாது என்றால் வீட்டிலேயே பணத்தை சேமிக்கலாம். அது எப்படி என்று தெரிந்து கொள்வோம்.
முதலில் ஒரு பவுன் நகை எவ்வளவு என்று தெரிந்து கொள்ள வேண்டும். இன்றைய தங்கம் விலை 22 கேரட் விலையானது 45,104 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையானது ஏறவும் செய்யலாம், இறங்கவும் செய்யலாம். அதனால் நீங்கள் ஒரு பவுனின் விலை 50,000 ரூபாய் என்று வைத்து கொள்வோம்.
ஒரு பவுனை ஒரு வருடத்தில் வாங்க வேண்டும். அப்படியென்றால் நீங்கள் தினமும் உங்களின் வருமானத்திலிருந்து 200 ரூபாய் சேமிக்க வேண்டும். அப்படி நீங்கள் சேமித்தால் ஒரு மாதத்தில் 6000 ரூபாய் சேமிப்பித்திருப்பீர்கள். அப்படி பார்க்கும் போது வருடத்திற்கு 72,000 ரூபாய் சேமிக்கலாம். இதை வைத்து நீங்கள் 1 1/2 பவுன் எடுக்கலாம்.
வெயிலில் பைக்கை அதிக நேரம் ஒட்டி செல்லும் நபரா நீங்கள்.. அப்போ உங்களுக்கான டிப்ஸ் இதோ..!
| மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |














