How to Save Money for Buying a House in Tamil
இன்றைய சூழலில் பொருளாதார ஏற்ற இரக்கத்தை பார்த்தே அனைவருக்குமே தங்களின் எதிர்காலத்திற்காக சேமிக்க வேண்டும் என்ற ஆசையும் ஆர்வமும் உள்ளது. ஆனால் எவ்வாறு சேமிப்பது என்பதில் பலருக்கும் குழப்பம் உள்ளது. பொதுவாக ஒரு சிலர் நகை வாங்கி தங்களது சேமிப்பை அதிகரித்து கொள்வார்கள். அது போல் ஒரு சிலர் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்து தங்களது சேமிப்பை அதிகரித்து கொள்வார்கள். ஆனால் ஒரு சிலர் மட்டுமே தங்களது சேமிப்பை பயன்படுத்தி தங்களுக்கு நீண்ட நாட்களுக்கு பயன்படும் வகையில் சேமிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதாவது வீடு வாங்குதல் அல்லது வீட்டு மனை வாங்குதல் ஆகியவற்றின் மூலம் தங்களின் சேமிப்பை அதிகரித்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் இன்றைய சூழலில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்றாலே அதற்காக நாம் அதிக அளவு சேமிக்க வேண்டியுள்ளது. அதனால் எவ்வாறெல்லாம் சேமித்தால் கூடிய விரைவில் சொந்தமாக வீடு வாங்க முடியும் என்பதற்கான சில குறிப்பினை இங்கு காணலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl |
வீடு வாங்க சேமிப்பது எப்படி..?
டிப்ஸ் – 1
இன்றைய கால கட்டத்தில் பலருக்கும் உள்ள ஒரு பொதுவான ஆசை என்றால் தனக்கென்று சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது தான். அதற்காக நீங்கள் பல வகையில் முயற்சிக்கலாம். அதாவது ஒரு சிலர் கடனை வாங்கி தங்களது சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற ஆசையை நிறை வேற்றி கொள்வார்கள். ஆனால் நீங்கள் வாங்கிய கடனை திரும்ப செலுத்துவதற்குள் நீங்கள் படாதபாடுபட்டுவிடுவீர்கள்.
ஆனால் இப்பொழுது நான் கூறும் வழியில் சேமிக்க தொடங்கினீர்கள் என்றால் கடனே வாங்காமல் சொந்தமாக வீடு வாங்கி விடலாம். அதாவது வங்கி அல்லது போஸ்ட் ஆஃபிஸில் ஏதாவது ஒரு சேமிப்பு முறையை தொடங்கி அதில் மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை சேமிக்கலாம். அதாவது ஒரு மாதத்திற்கு உங்கள் வருமானத்தில் இருந்து 5,000 ரூபாய் என சேமிக்க தொடங்குங்கலாம். அப்படி இல்லையென்றால் அதிகபட்சம் உங்களால் எவ்வளவு சேமிக்க முடியுமோ அவ்வளவு சேமிக்கலாம்.
இப்படி சேமித்தால் 6 மாதத்தில் ஒரு பவுன் எடுத்து விடலாம்
டிப்ஸ் – 2
அடுத்து வழிமுறை என்னவென்றால் இன்றைய சூழலில் பல நிறுவனங்கள் வீடுகளை கட்டி விற்பனை செய்கிறார்கள். அவ்வாறு விற்பனை செய்யும் நிறுவனங்களிடம் இருந்து நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு வீடு வாங்க வேண்டும் என்று சிந்தனை செய்கிறீர்கள் என்றால் அதற்காக நீங்கள் உங்கள் வீட்டிலேயே சேமிக்க ஆரம்பிக்கலாம்.
அதாவது நீங்கள் 12,00,000 ரூபாய் மதிப்புள்ள வீடு தான் வாங்க இருக்கின்றீர்கள் என்றால் அந்த வீட்டிற்க்காக நீங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை தினமும் சேமிக்க சேமிக்க வேண்டும். உதாரணத்திற்கு நீங்கள் தினமும் 1,000 ரூபாய் என சேமிக்க தொடங்கினீர்கள் என்றால் மாதம் 30,000 ரூபாய் வரை சேமிக்கலாம்.
இப்படியே தினமும் சேமிக்க ஆரம்பித்தீர்கள் என்றால் 3 1/2 வருடத்திற்குள் சேமித்து உங்களின் கனவு வீட்டினை வாங்கி விடலாம்.
எவ்வளவு பணம் வீட்டில் இருந்தாலும் சேமிக்க முடியாமல் செலவு ஆகிவிடுகிறதா
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |