எறும்பு வராமல் இருக்க
அனைவருடைய வீட்டிலும் எறும்பு பிரச்சனை இருக்கிறது. நாம் எதாவது சமையலுக்கு பயன்படுத்தும் பொருளையோ அல்லது சாப்பிடும் ஸ்னாக்ஸையோ வைத்து விட்டு சிறிது நேரம் கழித்து பார்த்தால் எறும்பு வந்து அதை சாப்பிட்டு கொண்டிருக்கும். பகல் நேரம் மட்டும் இல்லாமல் இரவு நேரங்களிலும் ஈ, எறும்பு தொல்லையாகவே இருக்கு என்று புலம்பும் நபர்கள் தான் அதிகாக இருக்கிறார்கள். இனிமேல் உங்கள் வீட்டு பக்கமே ஈ, எறும்பு வராமல் இருப்பதற்கான டிப்ஸினை பற்றி தான் இன்றைய பதிவில் தெரிந்துக்கொள்ள போகிறோம். மேலும் இன்றைய பதிவு அனைவருக்கும் உதவியானதாக இருக்கும். ஏனென்றால் அனைவருடைய வீட்டிலும் தான் ஈ, எறும்பு தொல்லை இருக்கிறது. ஆகையால் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துக்கொள்ளலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
How to Stop Ants Coming Into The House in Tamil:
டிப்ஸ்- 1
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் ஷாம்பு போட்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து கொள்ளுங்கள்.
இப்போது கலந்து வைத்துள்ள தண்ணீரை ஒரு ஸ்பிரே பாட்டிலில் ஊற்றி அந்த தண்ணீரை சுவற்றில் எறும்பு இருக்கும் இடத்தில் தெளித்து விடுங்கள்.
அதன் பிறகு சிறிது நேரம் கழித்து அந்த இடத்தை பார்த்தால் எறும்புகள் எல்லாம் அந்த ஷாம்பு வாசனையால் கீழே மயங்கி விழுந்து விடும் மற்றும் மீண்டும் அந்த இடத்திற்கு எறும்பும் வராது. இதுபோல வாரத்திற்கு ஒருமுறை இந்த ஷாம்பு தண்ணீரை தயார் செய்து தெளித்து விடுங்கள்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
பாத்ரூம் டைல்ஸ் எவ்வளவு பழையதாக இருந்தாலும் புதிதாக மாற்ற இந்த ஒரு பொருள் போதும்
டிப்ஸ்- 2
எறும்பு வராமல் இருப்பதற்கு இரண்டாவதாக பார்க்கப்போகும் டிப்ஸிற்கு முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் சால்ட் உப்பு சேர்த்து கலந்து கொள்ளுங்கள்.
அடுத்து கலந்து வைத்துள்ள அந்த பவுடரை எறும்பு வரும் இடத்தில் தூவி விட்டு உங்களுடைய கையால் தேய்த்து விடுங்கள். இது மாதிரி நீங்கள் செய்யும் போது எறும்பு அந்த இடத்திற்கு வராது ஒருவேளை எறும்பு வந்தாலும் சிறிது நேரத்தில் மயங்கி விழுந்து விடும்.
டிப்ஸ்- 3
ஒரு கிண்ணத்தை எடுத்துக்கொண்டு அதில் 1 ஸ்பூன் மஞ்சள் தூள் மற்றும் சிறிதளவு சந்தனம் எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலந்து ஈ வரும் இடத்தில் லேசாக தெளித்து விட்டால் போதும் அந்த இடத்தில் ஈ வரவே வராது. ஏனென்றால் மஞ்சள் தூள் எதிர்ப்பு சக்தியை கொண்டுள்ளது.
இதையும் படியுங்கள்⇒ கரப்பான் பூச்சி, எறும்பு, வண்டு, எலி, பல்லி, மூட்டை பூச்சி வராமல் இருக்க இதை மட்டும் செய்யுங்க..!
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |