மழைக்காலத்தில் அடிக்கடி சிறுநீர் வருகிறதா.? அப்போ இதை செய்யுங்கள்

Advertisement

மழை காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழித்தல்

வணக்கம் நண்பர்களே 🙏 இன்றைய பதிவில் எல்லோருக்கும் ஒரு பயனுள்ள தகவலை பற்றித்தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். பொதுவாக எல்லோருக்கும் இருக்க கூடிய பிரச்சனைகளில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் ஒரு பிரச்சனையாக இருக்கின்றது.

இது பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை ஏற்பட கூடிய ஒரு பிரச்சனையாக இருக்கிறது, பெரும்பாலும் வேலை செய்பவர்களுக்கு, அடிக்கடி சிறுநீர் வருவது மிகப்பெரிய தொல்லையாக  உள்ளது, மேலும்  இரவு தூங்கும் பொழுதும்  அடிக்கடி சிறுநீர் போகும் பிரச்சனைகளும் ஏற்படுகின்றன. இவற்றை எப்படி எளிய முறையில் சரி செய்வது என்று தெரிந்து கொள்வோம் வாங்க.

அடிக்கடி சிறுநீர் கழிப்பதை தடுக்க சில வழிகள்..!

மழைக்காலத்தில் அடிக்கடி சிறுநீர் கழிப்பதற்கு காரணம் என்ன.?

பொதுவாக நீங்கள் கவனித்திருக்கிறீர்களா.? வெயில் காலத்தில் யாருக்குமே அடிக்கடி சிறுநீர் பிரச்சனைகள் வாராது, சிறுநீர் கடுப்புதான் ஏற்படும், ஆனால்  மழைக்காலம், பனிக்காலம் போன்ற நேரங்களில் அடிக்கடி சிறுநீர் வருவதற்கு காரணம் என்ன தெரியுமா.?  பொதுவாக வெயில் காலங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும் பொழுது நாம் குடிக்கும் தண்ணீர்கள்  நம்முடைய தோல்களில் இருந்து வேர்வையாக வெளியாகிறது, ஆனால் மழைக்காலத்திலும், பனிக்காலத்திலும் குளிர்ச்சிகள் அதிகமாக இருப்பதால், இவை தோல்களின் வழியாக ஆவியாகாமல் இருப்பதால், சிறுநீர் பையில் இருந்து அடிக்கடி வெளியாகிறது.  மேலும் இவற்றை எளிய முறையில் எப்படி போக்குவது என்று தெரிந்து கொள்வோம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல் மருத்துவம்:

டிப்ஸ்:1 

தேவையான பொருட்கள்:

  1. தேன்- 2
  2.  தண்ணீர்- 1 டம்ளர் 

செய்முறை:

முதலில் ஒரு 1 டம்ளர் அளவு தண்ணீர் எடுத்துக் கொண்டு, அதை ஒரு சிறிய பாத்திரத்தில் ஊற்றி, அடுப்பில் மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். பிறகு அந்த  தண்ணீர் சூடு ஆறிய பிறகு,  அதில் 2 ஸ்பூன் அளவு தேன் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். 

நீங்கள் தயார் செய்து வைத்த தண்ணீரை இரவு படுக்கும் பொழுது குடித்தால், இரவில் அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் தீர்வடையும்.

டிப்ஸ்:2

தேவையான பொருட்கள்:

  1. நாவல்பழம் கொட்டை பவுடர்- 1 ஸ்பூன் 
  2. தண்ணீர்- தேவையான அளவு 

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு, அடுப்பை மிதமான சூட்டில் வைத்து தண்ணீரை நன்றாக சூடுபடுத்த வேண்டும். தண்ணீர் சூடானதும் அதை ஒரு டம்ளரில் வடிக்கட்டி கொள்ள வேண்டும். பிறகு அதில் நாவல்பழம் கொட்டை பவுடரை கலந்து, மிதமான சூட்டில் குடிக்க வேண்டும். 

இதை தினமும் ஒரு முறை குடித்து வருவதால், அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பிரச்சனை மற்றும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சனைகள் எல்லாம் தீர்வு அடைந்து விடும். எனவே நீங்களும் இதனை செய்து குடித்து பாருங்கள்.

சிறுநீர் தொற்று நீங்க இயற்கை மருத்துவம்

 

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement