Thengai Kettu Pogamal Iruka
அன்றாடம் அனைவருடைய வீட்டிலும் மூன்று வேளை இல்லாமல் என்றாலும் கூட ஒரு வேளையாவது கண்டிப்பாக சமைக்க வேண்டி இருக்கும். இவ்வாறு சமைக்கும் போது சமையலுக்கு ஏற்றவாறு பொருட்களை பயன்படுத்துவது நாம் அனைவருக்கும் வழக்கம். அதேபோல் ஒவ்வொரது வீட்டின் சமையலும் ஒவ்வொரு மாதிரியாக இருக்கும். அதாவது உப்பு, காரம், எண்ணெய், தேங்காய் என இதுபோன்ற பொதுவான பொருட்களை விருப்பத்திற்கு ஏற்றவாறு சேர்த்து கொள்வார்கள். ஆனால் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது தேங்கையானது அப்படி கிடையாது. ஏனென்றால் மற்ற பொருட்கள் எத்தனை நாட்கள் ஆனாலும் வீணாகாது. அதுவே இன்று சமையலுக்காக ஒரு தேங்காய் உடைத்தோம் என்றால் அதில் சிறிதளவு மட்டுமே பயன்படுத்தி விட்டு மீதம் இருப்பதை அப்படி பாதுகாக்க முடியாது. இந்த பிரச்சனை பெரும்பாலான வீடுகளில் இருக்கிறது. அதனால் இன்று தேங்காய் நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை தான் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
தேங்காய் கெடாமல் இருக்க டிப்ஸ்:
ஸ்டேப்- 1
நீங்கள் எப்போதும் தேங்காய் உடைக்கிறீர்கள் என்றால் அதனை சரியான முறையில் தான் உடைக்க வேண்டும். ஆகவே அதனை கவனமாக பார்த்து உடைத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 2
அதன் பிறகு இட்லி பானையில் உடைத்த இரண்டு மூடி தேங்காயினையும் வைத்து நன்றாக அடுப்பில் 10 நிமிடம் வரை வேக வைத்துக்கொள்ள வேண்டும்.
ஸ்டேப்- 3
10 நிமிடம் கழித்து வேக வைத்த தேங்காயினை நன்றாக ஆற வைய்யுங்கள். பின்பு தேங்காயின் மேல் இருக்கும் ஓட்டினை வெளியே எடுத்து விடுங்கள்.
ஸ்டேப்- 4
அடுத்து தேங்காயின் மேலே இருக்கும் தோலினையும் நன்றாக சீவி எடுத்துக்கொள்ளுங்கள்.
ஸ்டேப்- 5
இப்போது அந்த தேங்காயினை சிறு சிறு துண்டாக நன்றாக நறுக்கி வைத்து கொள்ளுங்கள். இதனை தொடர்ந்து நறுக்கி வைத்துள்ள தேங்காய் பீஸினை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக பூ போல துருவி எடுத்து விடுங்கள்.
ஸ்டேப்- 6
கடைசியாக துருவிய தேங்காய் துருவலை Zip லாக் பவுச்சில் சேர்த்து பிரிட்ஜில் அப்படியே வைத்து விடுங்கள். இவ்வாறு செய்தால் போதும் தேங்காய் நீண்ட நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
இனி உங்க வீட்டில் இருக்கும் Fan-யில் ஒரு தூசி கூட இருக்காது.. இந்த டிப்ஸை மட்டும் பாலோ பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |