How to Store Coconut for Long Time
பொதுவாக சந்தைகளில் விற்பனை செய்யப்படும் காய்கறிகளில் சிலவற்றை ஏற்றம் இரக்கம் இருக்கும். அந்த வகையில் தக்காளி, வெங்காயம் இவை இரண்டிற்கும் அடுத்தபடியாக தேங்காயிற்கு விலை ஏற்றம் இரக்கம் இருக்கும். தேங்காயின் விலை அதிகரிக்கும் போது நாம் அதிகமாக வாங்க மாட்டோம். அதுவே குறைவாக விற்பனை செய்யும் போது அதிகமாக வாங்கி வைத்துக்கொள்வோம். தக்காளி, வெங்காயம் சமையலுக்கு அதிகமாக பயன்படுவது போல் தேங்காவும் அதிகமாக பயன்படும். ஆக தேங்காயின் விலை குறையும் போது அதிகமாக விற்பனை செய்யும் போது அதனை அதிகமாக வாங்கி வைத்துக்கொள்வோம். அவ்வாறு நாம் அதிகமாக வாங்கி வைத்துக்கொண்டாலும் சில நாட்களில் அவை அழுகிவிடும். அவ்வாறு அழுகி போகாமல் இருக்க மற்றும் ரொம்ப நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்க சில டிப்ஸினை இங்கு நாம் பார்க்கலாம் வாங்க.
டிப்ஸ்: 1
தேங்காயினை ஈரப்பதம் இல்லாத வாறு துடைத்துக்கொள்ளுங்கள், பின் சிறு சிறு துண்டுகளாக கட் செய்து வைத்துக்கொள்ளவும், பின்பு அதனை கேரட் சீவும் பலகையால் சீவி கொள்ளவும். பிறகு அடுப்பில் வாணலி வைத்து சீவி வைத்துள்ள தேங்காயினை, சேர்த்து ஈரப்பதம் இல்லாத வாறு வதக்கி எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு நன்றாக ஆறவைத்து சில்வர் டப்பா அல்லது கண்ணாடி டப்பாவில் இந்த வதக்கிய தேங்காயினை போட்டு மூடி வைக்கவும். உங்களுக்கு எப்போது தேவைப்படுகிறதோ அப்போது எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இவ்வாறு செய்வதினால் தேங்காய் வெகு நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும்.
டிப்ஸ்: 2
உடைந்த தேங்காயினை கேஸ் அடுப்பில் வைத்து மேல் படத்தில் காட்டியுள்ளது போல் சுட்டுக்கொள்ளுங்கள். அதாவது கொட்டாங்குச்சியின் நிறம் மாறும் வரை சுட்டு எடுத்துக்கொள்ளுங்கள். பிறகு அந்த தேங்காயினை எடுத்து தண்ணீரில் போட்டு ஆறவைக்கவும். சுட்ட தேங்காய் நன்கு ஆறியதும் அந்த தண்ணீரில் இருந்து எடுத்து அந்த கொட்டாங்குச்சியில் இருந்து தேங்காயை தனியாக எடுத்து, சிறு சிறு துண்டுகளாக கட் செய்து ஒரு டப்பாவில் வைத்து, பிட்சியில் ஸ்டோர் செய்து வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு எப்போதெல்லாம் தேவைப்படுகிறதோ அப்போதெல்லாம் சமைக்க பயன்படுத்திக்கொள்ளலாம்.
டிப்ஸ்: 3
திருவும் பலகையால் தேங்காயினை திருவி கொள்ளுங்கள் பின்பு மிக்சி ஜாரில் திருவிய தேங்காயினை சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி அரைத்து கொள்ளுங்கள். பிறகு பிரிட்ஜில் ஐஸ் க்யூப் வைக்கும் ட்ரேயில் இந்த அரைத்த தேங்காயினை செட் செய்து பிரீஸரில் வைக்கவும். பிறகு உங்களுக்கு எப்போது எல்லாம் தேவைப்படுகிறது அப்போது எல்லாம் எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉 சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இப்படி பண்ணுங்க
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |