How To Store Coconut Oil in Tamil | தேங்காய் எண்ணெய் கெடாமல் இருக்க
பொதுவாக, நாம் வீடுகளில் சில பொருட்களை நீண்ட காலத்திற்கு வீணாகாமல் சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம். அதில் ஒரு பொருள் தான் தேங்காய் எண்ணெய். தேங்காய் எண்ணெயை நாம் 3 மாதத்திற்கு மேலாக சேமித்துவைக்கும்போது தேங்காய் எண்ணெயில் அழுகிய நாற்றம் வீச தொடங்கிவிடும். அதாவது, தேங்காய் எண்ணெய் கெட்டுப்போக தொடங்கிவிட்டது என்று அர்த்தம். அப்படி என்றால் நீங்கள் தேங்காய் எண்ணெயய் முறையாக சேமிக்கப்படவில்லை என்று அர்த்தம். எனவே, தேங்காய் எண்ணெய் நீண்ட காலம் வரை கெடாமல் இருக்க எப்படி சேமிக்க வேண்டும்.? என்பதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.
How To Store Coconut Oil For Long Time in Tamil:
டிப்ஸ் -1
முதலில், மில்லில் தேங்காய் எண்ணெய் ஆட்டி வந்ததும் அதனை நன்கு வெயில் படும் இடத்தில் வைத்து காயவைத்து எடுத்து ஈரப்பதம் இல்லாத இறுக்கமான மூடி கொண்ட சில்வர் பாத்திரத்தில் சேர்த்து மூடி வைத்து கொள்ளுங்கள்.
வெயிலில் காயவைத்து எடுத்து வைப்பதன் மூலம் தேங்காய் எண்ணெய் கெட்டுப்போகாமல் கெட்ட வாசனை வீசாமலும் இருக்கும்.
உடைத்த தேங்காய் ஒரு மாதம் ஆனாலும் கருக்காமல் இருக்க இதனை மட்டும் மட்டும் பண்ணுங்க
டிப்ஸ் -2
தேங்காய் எண்ணெய்யை ஈரப்பதன் இல்லாத இடத்தில் வைக்க வேண்டும். அதாவது, அறை வெப்பநிலை உள்ள உலர்ந்த இடத்தில் சேமித்து வைக்க வேண்டும்.
டிப்ஸ் -3
தேங்காய் எண்ணெய் நீண்ட காலம் கெட்டுப்போகால் இருக்க மற்றொரு வழி உப்பு. அதாவது, தேங்காய் எண்ணெய்யில் சிறிதளவு (1/2 ஸ்பூன்) கல் உப்பை போட்டு வைப்பதன் மூலம் தேங்காய் எண்ணெய் கெட்டு போகாமல் இருக்கும்.
டிப்ஸ் -4
தேங்காய் எண்ணெய்யில் 1 ஸ்பூன் மிளகு போட்டு வைப்பதன் மூலம் நீண்ட காலம் கெட்டு போகாமல் இருக்கும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |