பச்சை மிளகாய் சீக்கிரமே அழுகி விடுகிறதா..! அப்போ இப்படி செய்யுங்க.. மாதக்கணக்கில் அழுகாமல் இருக்கும்..!

Advertisement

How to Keep Green Chillies Fresh in Fridge in Tamil

பச்சை மிளகாய் இல்லாமல் சமையல் இல்லை. பச்சை மிளகாய் எந்த அளவிற்கு காரத்தன்மை உடையதோ அந்த அளவிற்கு அதில் ஆரோக்கியமும் நிறைந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இது சமையலின் சுவையை அதிகரிக்கவும் செய்கிறது. எனவே இதனை வாங்கி வந்து நாம் உபயோகப்படுத்துவோம். ஆனால் இது சில நாட்களிலே அழுகி விடும். இதனால் இதனை பிரிட்ஜில் வைத்து பயன்படுத்துவோம். இருப்பினும் 10 அல்லது 15 நாட்களில் அழுக தொடங்கிவிடும். எனவே பச்சை மிளகாய் மாதக்கணக்கில் வீணாகாமல் வைத்திருக்கக்கூடிய சில குறிப்புகளை இப்பதிவில் பின்வருமாறு கொடுத்துள்ளோம். எனவே இப்பதிவை முழுவதுமாக படித்து பயனடையுங்கள்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

How to Keep Green Chillies Fresh For Long Time in Tamil:

 how to store green chillies for months in tamil

ஜிப்லாக் கவர்களை பயன்படுத்துங்கள்:

 

 how to store green chillies for long time in tamil

முதலில் பச்சை மிளகாயை தண்ணீரில் கழுவி அதன் காம்பு பகுதியை நீக்கி கொள்ளுங்கள். பிறகு பச்சை மிளகாயை தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். இப்போது இதனை ஜிப்லாக் கவரில் போட்டு பைக்குள் காற்று இல்லாதவாறு மூடி பிரிட்ஜினுள் வைத்து விடுங்கள்.  இவ்வாறு செய்வதன் மூலம் பச்சை மிளகாய் 2 மாதம் வரை பழுக்காமலும் அழுகாமலும் இருக்கும்.

டிஸ்யூ பேப்பர் பயன்படுத்தலாம்:

 how to keep green chillies fresh for long time in tamil

பச்சை மிளகாயை கழுவி அதன் காம்பு பகுதியை நீக்கி விட்டு தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பிறகு பச்சை மிளகாயில் டிஸ்யூ பேப்பரை சுற்றி டப்பா அல்லது காகித பைகளில் போட்டு பிரிட்ஜினுள் வைத்து விடுங்கள்.

காற்று புகாத டப்பாவை பயன்படுத்தவும்:

 keep chillies fresh longer in tamil

பச்சை மிளகாயை கழுவி அதன் காம்பு பகுதியை நீக்கி விட்டு தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பிறகு உலர்ந்த மென்மையான துணியை ஒரு டப்பா அல்லது ஜாடியினுள் வைத்து அதன் மேல் பச்சை மிளகாயை வைத்து காற்று புகாமல் மூடி விடுங்கள். 

இவ்வாறு செய்வதன் மூலம் பச்சை மிளகாய் 20-25 நாட்கள் அழுகாமல் இருக்கும்.

தக்காளியில் செல்லோ டேப் ஓட்டினால் நீண்ட நாள் வரை அழுகாமல் இருக்குமா ஆச்சரியமாக இருக்கே ..

அலுமினிய பாயில் (Aluminum Foil Cover) முறை:

 how to store green chillies for months in tamil

வழக்கம் போல், பச்சை மிளகாயை கழுவி அதன் காம்பு பகுதியை நீக்கி விட்டு தண்ணீர் இல்லாமல் துடைத்து கொள்ளுங்கள். பிறகு, ஒரு தட்டில் பச்சை மிளகாயை வைத்து Aluminum Foil Cover கொண்டு மூடி பிரிட்ஜினுள் விடுங்கள்.

அழுகிய பச்சை மிளகாயை எடுத்தல்:

பச்சை மிளகாயில் ஒரு மிளகாய் அழுகினால் கூட அதனை உடனே எடுத்து விட வேண்டும். ஏனென்றால் ஒரு மிளகாய் அழுகி விட்டால் மற்ற மிளகாய்களும் அழுக தொடங்கும்.

அரிசி முதல் கோதுமை மாவு வரை பூச்சிகள் வராமலும், நீண்ட நாட்களுக்கு உழைத்து வரவும் இப்படி பண்ணுங்க..

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement