How to Store Pudina Leaves for Long Time in Tamil
நாம் அனைவருமே நீண்ட நாட்களுக்கு ஆரோக்கியமாக உயிர்வாழ்வதற்கு மிக மிக முக்கியமானது என்றால் அது உணவு தான். அப்படி நமது வாழ்க்கைக்கு அத்தியாவசியமான உணவினை தயாரிக்க தேவையான பொருட்களை நாம் மிக மிக கவனமாக தேர்வு செய்து வாங்கி வைத்து கொள்வோம். ஆனாலும் அவை நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க முடியாது. அதிலும் குறிப்பாக காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் மிக மிக குறைந்து காலத்திற்கு மட்டுமே சேமித்து வைக்க முடியும். அவற்றை எல்லாம் நீண்ட நாட்களுக்கு சேமித்து வைக்க வேண்டும் என்று நினைப்போம் ஆனால் அது நம்மால் முடியாமல் போகும். அதனால் தான் இன்றைய பதிவில் நமது சமையலின் நறுமணத்திற்கு உதவும் புதினா இலையை நீண்ட நாட்களுக்கு வாடி வதங்காமல் வைத்திருக்க உதவும் குறிப்பினை பற்றி விரிவாக காணலாம் வாங்க..
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
How to Store Mint Leaves for Long Time in Tamil:
பொதுவாக கீரை வகைகளில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் இருப்பதாக அதனை அடிக்கடி உணவில் சேர்த்து வருமாறு நமது முன்னோர்கள் முதல் பலரும் நமக்கு அறிவுறுத்துகின்றனர்.
அதிலும் இந்த புதினாக்கீரை சற்று தனித்துவமானது. புதினா தன் நறுமணத்தில் தனித்தன்மையுடன் கீரைகளின் ராணியாக விளங்குகின்றது. இத்தகைய அருமை, பெருமை நிறைந்த புதினாக்கீரையை நீண்ட நாட்களுக்கு நம் வீட்டில் எப்படி புத்தம் புதியதாகவே சேமித்து வைத்திருப்பது என்பதற்கான சில குறிப்புகளை இங்கு பார்க்கலாம் வாங்க.
2 மாதங்கள் வரை வெங்காயம் கெட்டுபோகாமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
டிப்ஸ்:
நாம் வாங்கி வைத்துள்ள புதினா கட்டில் இருந்து அனைத்து அழுகி போன கீரைகளை பிரித்து எடுத்துவிட்டு நன்கு சுத்தம் செய்துவிட்டு. ஒரு கப் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
பின்னர் அதில் நாம் புதினா கட்டை அரை மணி நேரம் ஊறவிடவும். பிறகு நன்றாக கழுவி அதனை உலர விடவும். நன்கு உலர்ந்ததை உறுதிசெய்ய புதினா கட்டை ஒரு பேப்பர் டவலில் ஒத்தி எடுக்கவும்.
உலர்ந்த புதினா கட்டில் உள்ள புதினா கீரையை மட்டும் பிரித்து எடுத்து, பேப்பர் டவலில் வைத்து மற்றொரு பாத்திரத்தில் வைக்கவும். பிறகு அதன் மீது ஒரு பேப்பர் டவல் போர்த்தி இறுக்கமாக மூடி வைக்கவும்.
புதினா இலைகளில் ஒரு சிறு துளி கூட ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மிகவும் முக்கியம். இந்த காற்றுப்புகாத டப்பாவை உங்கள் ஃப்ரிட்ஜில் வைத்துக் கொள்ளலாம்.
அடுத்த இரண்டு முதல் மூன்று வாரங்கள் இந்த இலைகள் வாடாமல் புதிதாக அப்படியே இருக்கும்.
1 மாதம் வரை பச்சை மிளகாய் வீணாகாமல் இருக்க இந்த டிப்ஸை மட்டும் Try பண்ணுங்க போதும்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |