முந்திரி கெடாமல் இருக்க டிப்ஸ் – Tips to Keep Cashew Nuts From Spoiling in Tamil
விசேஷம் என்றால் வீட்டில் ஸ்வீட் இல்லாமல் இருக்காது. அதேபோல் ஸ்வீட் என்றால் அதில் முந்திரி இல்லாமல் இருக்காது. அதில் ராஜா யார் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் மந்திரி நமக்கு அனைவருக்கும் பிடித்த முந்திரி தான் இருக்கும். அந்த அளவிற்கு முந்திரி அனைவருக்கும் பிடிக்கும். சிலர் இனிப்பு எது செய்தாலும் அதில் இந்த முந்திரி பருப்பு இல்லாமல் இருக்காது. அதேபோல் நம் வீட்டில் விழாக்கள் வந்தால் அதற்கு நம் மளிகை சாமான் வாங்குவது வழக்கம். இன்னொன்று அனைத்து பொருட்களும் நிறைய அளவு வாங்குவார்கள்.
ஒரு சில பொருட்களை மட்டும் கிராம் கணக்கில் தான் வாங்குவார்கள் இதற்கு காரணம். ஒன்று அதனுடைய விலை மற்றொன்று அது விலையும் கூட அதி விரையில் கெட்டுவிடும். அதிக காசு கொடுத்து வாங்கினாலும் அது வீணாகிவிடும். அது இந்த பொருள் தான் முந்திரி, பாதம் தான். இது அனைத்துமே கிராம் கணக்கில் தான் வாங்குவார்கள். விரைவில் கெட்டுவிடும் என்பதால். இதனை சரி செய்யும் விதமாக தான் முந்திரி பருப்பு கெடாமல் இருக்க டிப்ஸ் பற்றி பார்க்க போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
Tips to Keep Cashew Nuts From Spoiling in Tamil:
முந்திரி பருப்பு சுவையான உணவுகளில் சேர்ப்பார்கள். அது இன்னும் சுவையை கொடுக்கும் இதற்கு என்று தனி சுவை உள்ளது. இந்த முந்திரி பருப்பு என்று நாம் அனைவரிடத்திலும் கதை இருக்கும். ஒன்று மிக்சர் சாப்பிட்டால் அதில் இருக்கும் முந்திரியை மட்டும் சாப்பிடுவோம். அதன் பின்பு வீட்டில் பொங்கல், கேசரி என்று இதுபோன்ற இனிப்பு செய்தால் அதில் இருக்கும் முந்திரியை மட்டும் திருடி சாப்பிடுவது பழக்கம் இருக்கும். இதுபோல் ஒவ்வொருவருக்கும் ஒரு கதை இருக்கும். சரி வாங்க இப்போது முந்திரி பருப்பு கெடாமல் நீண்ட நாட்கள் இருக்க டிப்ஸ் என்ன..?
டிப்ஸ்: 1
முந்திரி பருப்பை ஒரு சிலர் வீட்டில் குறைந்த அளவு வாங்குவது வழக்கம். அதேபோல் ஒரு சிலர் வீட்டில் மொத்தமாக வாங்குவது வழக்கம். குறைத்து வாங்கினால் அப்போது பயன்படுத்தி கொள்ளலாம். ஆனால் மொத்தமாக வாங்கினால் அதனை அதிக நாட்களை வைத்து பயன்படுத்தவேண்டும். அது கெடாமல் இருக்க வேண்டுமென்றால் அதனை கடாயில் கருக விடாமல் வறுத்து அதனை எடுத்துக் கொள்ளவும்.
பிரிட்ஜில் வைக்கவேண்டிய பொருட்கள் என்ன வைக்ககூடாத பொருட்கள் என்ன என்பதை பார்ப்போம்
டிப்ஸ்: 2
அந்த வறுத்த முந்திரியை அப்படியே வைப்பதை விட காற்று புகாத பாக்சில் போட்டு தான் வைக்கவேண்டும். அதேபோல் அனைத்து பொருட்கள் வைக்கும் பாக்சில் வைக்கக்கூடாது. தனியாக வைக்க வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இதுபோல தேங்காய் இருந்தால் வாங்கவே வாங்காதீர்கள்..!
டிப்ஸ்: 3
உங்களிடம் பாக்ஸ் இல்லாமல் இருந்தால் ஜிப்-லாக் பையில் சேமித்து வைக்கலாம். அதேபோல் அதனை பயன்படுத்தும் போது ஈரம் இல்லாமல் கைகளால் எடுக்கவேண்டும். அதேபோல் அதனை சரியாக மூடி வைக்கவேண்டும்.
இதுபோல் ஏன் செய்யவேண்டும் என்றால் முந்திரி பருப்பு நீண்ட நாட்கள் ஸ்டோர் செய்யாமல் இருந்தோம் என்றால் அது நமத்து போய்விடும். மொறு மொறுப்பாக இல்லாமலும் மேலும் அதனுடைய நிறம் மாறிவிடும். ஆகவே இதுபோல் ஸ்டோர் செய்யவேண்டும்.
வெங்காயம் மாதக்கணக்கில் கெடாமல் இருக்க இந்த டிப்ஸை பாலோ பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 | Tips in Tamil |