How To Store Tamarind for Long Time in Tamil
பொதுவாக, வீட்டுக்கு தேவையான பொருட்களை எந்த சீசனில் குறைவான விலையில் கிடைக்கிறதோ அப்பொழுது அதிகமாக வாங்கி சேமித்து வைப்பது. அதேபோல், புளி ஆனது ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அதிகம் விளையக்கூடியது. அப்போது புளியின் விலை குறைவாக இருக்கும். இதனால், அப்பொழுதே அதிக அளவில் புளியை வாங்கி வந்து சேமித்து வைப்போம். அவ்வாறு சேமித்து வைக்கும் புளி ஆனது, நாளடைவில் கருத்துபோக தொடங்கும். முக்கியமாக புளியில் வண்டுகளும் புழுக்களும் வர தொடங்கும். எனவே புளியில் பூச்சிகள் வருவதை தடுத்து 1 வருடம் வரை புளியை கறுப்பாகாமல் வைத்து கொள்வது எப்படி என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
Tips To Store Tamarind For Long Period in Tamil:
டிப்ஸ் -1
புளியை வாங்கி வந்ததும், அதில் உள்ள கொட்டைகள் மற்றும் காம்பு பகுதியை நீக்கி விட்டு வெயிலில் 1 நாள் முழுவதும் வெயிலில் நன்கு காயவைக்க வேண்டும்.
அதன் பிறகு, சின்ன சின்ன உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள்.
இப்போது, ஈரம் இல்லாத ஒரு பிளாஸ்டிக் வாளி அல்லது பீங்கான் டப்பாவில் அடியில் சிறிதளவு கல் உப்பு போட்டு நிரப்பி கொள்ளுங்கள்.
முழுவதுமாக புளியை நிரப்பி வைத்ததும், மீண்டும் அதன் மேல் கல் உப்பை தூவி காற்றுபுகாதவாறு மூடி வைத்து விடுங்கள்.
இப்படி சேமித்து வைப்பதன் மூலம் புளி ஒரு வருடம் வரை கருத்துப்போகாமல் இருக்கும்.
டிப்ஸ் -2
புளியை சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைக்கக்கூடாது.
புளியை எடுக்கும்போது ஈரக்கையுடன் எடுக்கக்கூடாது.
புளியில் நாம் ஏற்கனவே உப்பு போட்டு சேமித்து வைப்பதால் குழம்பு வைக்கும்போது உப்பின் அளவை குறைத்து போட வேண்டும்.
நன்கு வெயில் அடிக்கும் நேரத்தில் புளியை எடுத்து ஒருமுறை வெயிலில் காயவைத்து எடுத்து மீண்டும் அதேபோல் சேமித்து வைத்து கொள்ளுங்கள்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |