தக்காளி நீண்ட நாட்கள் வர
நாம் செய்யும் உணவுகளில் தக்காளி, வெங்காயம் இல்லாமல் எந்த சமையலும் நிறைவு பெறாது. சட்னி செய்வது முதல் குழம்பு வைப்பது வரை அனைத்து சமையல்களுக்கும் தக்காளி முக்கிய பொருளாக இருக்கிறது. அன்றாட சமையலுக்கு தேவையாக இருப்பதால் இதனை மொத்தமாக வாங்கி வைக்க முடியாது.
ஏனென்றால் 4 அல்லது 5 நாட்களுக்கு மேல் தக்காளி இருந்தால் அழுகி போகிவிடும். அதனால் இதனை 1/2 கிலோவிற்கு மேல் வாங்க மாட்டோம். தக்காளி விலையானது ஏற்றம் இறக்கத்துடன் தான் காணப்படுகிறது. அதனால் விலை குறைவாக இருக்கும் போது 1 கிலோ வாங்கி போடலாம் என்று தான் நினைப்போம். இதனை கெட்டு போகாமல் இருப்பதற்கு என்ன செய்வது என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
எப்படி வைக்க வேண்டும்:
தக்காளியை வாங்கி வந்தவுடன் எல்லா காய்கறிகளிலும் சேர்த்து போடாமல் இதனை தனியாக வைக்க வேண்டும். இதனை தினமும் கவனிக்க வேண்டும், ஒரு தக்காளி அழுகிய நிலை வந்தால் தனியாக எடுத்து வைத்துவிட வேண்டும். ஏனென்றால் அழுகிய தக்காளி இதனுடன் இருந்தால் மற்ற தக்காளியும் அழுகி போகிவிடும்.
வாங்கும் முறை:
தக்காளியை வாங்கும் போதே நல்ல தக்காளியாக பார்த்து வாங்க வேண்டும், ரொம்ப பழுத்த தக்காளியை வாங்க கூடாது. ஏனென்றால் ரொம்ப பழுத்திருந்தால் நீங்கள் வீட்டிற்கு எடுத்து வருவதற்குள் நசுங்கி வீணாகி விடும். அடுத்து செங்காயாக உள்ள தக்காளியாக பார்த்து வாங்க வேண்டும். இவை பழுப்பதற்கு 2 நாட்கள் ஆகும், கொஞ்சம் கொஞ்சமாக பழுத்த தக்காளியாக பயன்படுத்தலாம்.
இரண்டே நிமிடத்தில் கேஸ் பர்னர் புத்தம் புதுசாக மாற இப்படி செய்யுங்க
வைக்கும் முறை:
தக்காளியை வாங்கி வந்த பிறகு அதனை எப்படி வைக்க வேண்டும் என்று முதலில் அறிந்து கொள்ளுங்கள். வாங்கி வந்த தக்காளியை தாம்பாளம் அல்லது சல்லடை ஏதாவது ஒன்றை எடுத்து கொள்ளுங்கள். இதில் நீங்கள் தக்காளியை காம்பு உள்ள பகுதி மேலே தெரிவது போல தான் வைப்பீர்கள். ஆனால் இப்படி வைப்பது தவறு. காம்பு உள்ள பகுதி அடிப்பகுதியில் வைக்க வேண்டும். ஏனென்றால் காம்பு உள்ள பகுதியில் இருக்கும் ஓட்டையில் காற்று உள்ளே சென்று சீக்கிரம் தக்காளி வீணாகி விடும்.
மேல் கூறப்பட்டுள்ள முறையில் தக்காளியை பயன்படுத்தினால் ஒரு மாதம் வரைக்கும் தக்காளி கெட்டு போகாமல் இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |