தக்காளியில் செல்லோ டேப் ஓட்டினால் நீண்ட நாள் வரை அழுகாமல் இருக்குமா? ஆச்சரியமாக இருக்கே ..

Advertisement

தக்காளியில் செல்லோ டேப் ஓட்டினால் நீண்ட நாள் வரை அழுகாமல் இருக்குமா? ஆச்சரியமாக இருக்கே .. How to Store Tomatoes for Long Time in Tamil

பொதுவாக தக்காளி சமையலுக்கு அதிகம் பயன்படுத்தும் பொருள் ஆகும். அதிலும் காலை, மதியம், இரவு ஆகிய மூன்று வேளைக்கும் சமையல் செய்வதற்கு அவசியம் தேவைப்படும். இதன் காரணமாக தக்காளியை மட்டும் அனைவரது வீட்டிலும் கடைகளில் கிலோ கணக்கில் தான் வாங்குவார்கள். சில சமையம் நன்கு கனிந்த தக்காளியை வாங்கினால் அது சில நாட்களிலேயே அழுக ஆரம்பிக்கும். ஆக நாம் வாங்கும் தக்காளி அழுகாமல் இருக்க டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க அது என்ன டிப்ஸ் என்று இப்பொழுது பார்க்கலாம்.

ஸ்டேப்: 1

முதலில் நீங்கள் வாங்கி வைத்துள்ள தக்காளியை தண்ணீரில் போட்டு சுத்தமாக கழுவிக்கொள்ளுங்கள்.

ஸ்டேப்: 2

பிறகு கழுவிய தக்காளியை தண்ணீர் இல்லாமல் சுத்தமாக துடைத்து எடுத்துக்கொள்ளவும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
கேஸ் ரிப்பேர் ஆகாமலும், புதிதாகவே இருப்பதற்கு இதை கட்டாயம் கடைபிடியுங்கள்

ஸ்டேப்: 3

பிறகு மேல் படத்தில் காட்டியுள்ளது போல் செல்லோ டேப்பை சிறிய சிறிய துண்டுகளாக கட் செய்து தக்காளியில் ஒட்டிவிடவும்.

ஸ்டேப்: 4

பிறகு ஒரு பவுலை எடுத்துக்கொள்ளுங்கள் தக்காளியை மேல் படத்தில் காட்டியுள்ளது போல் குப்பற வைக்கவேண்டும். பிறகு பிரிட்ஜில் தக்காளியை காற்றோட்டத்துடன் வைத்து உபயோகப்படுத்தலாம். இப்படி செய்தால் தாக்களில் கிட்டத்தட்ட ஒரு மாதம் வரை அழுகி போகாமல் இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இட்லி மாவு, தோசை மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil

 

Advertisement