How To Store Tomatoes For Long Time
சமையலில் மிகவும் முக்கியமான உணவு பொருள் தக்காளி. தக்காளி இல்லாமல் எந்தவொரு சமையலும் நிறைவு பெறாது. அப்படி அனைத்து சமையலுக்கும் முக்கியமாக இருக்கும் தக்காளியின் விலை உயர்ந்துகொண்டே வருகிறது. என்னதான் விலை உயர்ந்தாலும் அதனை வாங்கித்தான் ஆக வேண்டும். ஆனால் மற்ற காய்களை விட தக்காளி விரைவில் அழியக்கூடியது. எனவே, இதனை நீண்ட நாட்களுக்கு கெடாமல் வைத்து எப்படி பயன்படுத்துவது என்பதை தான் இப்பதிவில் பார்க்கப்போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
How To Store Tomatoes For Months in Tamil:
தக்காளியை குப்புற வைக்க வேண்டும்:
தக்காளியின் காம்பு பகுதி தரையில் படுமாறு கவிழ்ந்து வைக்க வேண்டும். அதாவது, தக்காளியை தலைகீழாக வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் தக்காளி, நீண்ட நாட்களுக்கு கெடாமல் இருக்கும். அதுமட்டுமில்லாமல் தக்காளியை சூரிய வெளிச்சத்திலிருந்து விலக்கி வைப்பதன் மூலம் நீண்ட நாட்களுக்கு தக்காளி ஃபிரஷ்ஷாக இருக்கும்.
அழுகிய தக்காளியை நீக்கவும்:
நீங்கள் சேமித்து இருக்கும் தக்காளியை அடிக்கடி எடுத்து பார்க்கவும். அதில் ஏதேனும் ஒரு தக்காளி அழுகி இருந்தால் கூட அதனை உடனே நீக்கிவிட வேண்டும். அப்படி இல்லையென்றால் மற்ற தக்காளியும் எளிதில் அழுக தொடங்கிவிடும். எனவே, தக்காளியை தினமும் பார்த்து அழுகிய நிலையில் உள்ள தக்காளியை எடுத்து விடுதல் நல்லது.
ஃபிரீசரில் வைத்து பயன்படுத்தவும்:
ஒவ்வொரு தக்காளியையும் நான்காக நறுக்கி அதனை குளிர்சாதன பெட்டியின் ஃபிரீசரில் வைத்து விடுங்கள். தக்காளி நன்றாக உறைந்து கெட்டியாக ஆனதும் அதனை ஒரு காற்று புகாத டப்பாவில் போட்டு குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். இவ்வாறு செய்தால் தக்காளி மூன்று முதல் நான்கு மாதங்களுக்கு அழுகாமல் இருக்கும்.
தக்காளியை அரைத்து சேமிக்கவும்:
முதலில் தக்காளியை நன்றாக கழுவி எடுத்து கொள்ளுங்கள். பிறகு, தக்காளியில் ஈரப்பதம் இல்லாதவாறு ஒரு துணியினை பயன்படுத்தி துடைத்து கொள்ளுங்கள். பிறகு, தக்காளியை நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள். இதனை ஒரு ஒரு காற்று புகாத டப்பாவில் ஊற்றி குளிர்சாதன பெட்டியில் வைத்து விடுங்கள். இந்த தக்காளி பேஸ்டை நீங்கள் 10 அல்லது 15 நாட்கள் வரை பயன்படுத்தலாம்.
காய்கறிகளை வாங்கும் போது இப்படி பார்த்து வாங்குங்கள்
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |