வீட்டில் கரையான் தொல்லை தாங்க முடியவில்லையா..? அதனை விரட்ட ஆரஞ்சு மட்டும் போதும்..!

How to Termite Control at Home in Tamil

வணக்கம் நண்பர்களே..! தினமும் நமது பதிவின் வாயிலாக ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு வருகின்றிர்கள். அதேபோல் இந்த பதிவிலும் ஒரு பயனுள்ள தகவலை தான் அறிந்து கொள்ள இருக்கின்றிர்கள். அதாவது நமது வீடுகளில் நாம் பலவகையான மரத்தினால் செய்யப்பட்ட பொருட்கள் இருக்கும். சில நாட்களுக்கு பிறகு பார்த்தால் அதில் கரையான் வந்து அதனை நாசமடைய செய்துவிடும். அப்பொழுது நமக்கு மிக மிக கஷ்டமாக இருக்கும். அதனால் அதனை போக்குவதற்கு நாமும் பல வழிகளை கையாண்டிருப்போம். ஆனால் அவையாவும் நமக்கு நல்ல பலனை அளித்திருக்காது. எனவே தான் இன்றைய பதிவில் கரையான் தொல்லையை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி விரிவாக அறிந்து கொள்வோம் வாங்க.. 

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வீட்டில் கரையான் அழிப்பது எப்படி..?

Termite killer in tamil

 

வீட்டில் நம்மை தொல்லை செய்யும் கரையான்களை நிரந்தரமாக போக்க உதவும் ஒரு குறிப்பினை பற்றி இங்கு காணலாம் வாங்க..

குறிப்பிற்கு தேவையான பொருட்கள்:

  1. வேப்ப எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. கிராம்பு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  3. ஆரஞ்சு எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன் 
  4. வெள்ளை வினிகர் – 3 டேபிள் ஸ்பூன் 
  5. ஸ்ப்ரே பாட்டில் – 1

நெல் வயலில் எலி தொல்லை நீங்க வறுத்த கடலையை இப்படி செய்து வைத்தாலே போதும்

கிண்ணத்தை எடுத்து கொள்ளவும்:

முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து அதில் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் வேப்ப எண்ணெய் மற்றும் 1 டேபிள் ஸ்பூன் கிராம்பு எண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

ஆரஞ்சு எண்ணெய்யை கலக்கவும்:

அடுத்து அதனுடன் நாம் எடுத்து வைத்துள்ள 1 டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு எண்ணெய்யையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

வீட்டில் தொல்லை செய்யும் எறும்புகளை விரட்ட பூண்டு மட்டும் போதும்

வெள்ளை வினிகரை சேர்த்து கொள்ளவும்:

இறுதியாக அதில் 3 டேபிள் ஸ்பூன் வெள்ளை வினிகரை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.

பயன்படுத்து முறை:

பின்னர் இதனை நாம் எடுத்து வைத்திருந்த ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி எங்கெல்லாம் கரையான் தொல்லை அதிகம் உள்ளதோ அங்கெல்லாம் ஸ்ப்ரே செய்து கொள்ளுங்கள்.

இதன் மூலம் கரையான் நிரந்தரமாக நீங்குவதை காணலாம்.

1 ரூபாய் கூட செலவு இல்லாமல் வீட்டில் அட்டகாசம் செய்யும் கொசுக்களை ஓட ஓட விரட்டலாம்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil