Eucalyptus Oil for Cockroaches
அனைவருடைய வீட்டிலும் பல்லி, கரப்பான் பூச்சி, ஈ மற்றும் கொசுக்கள் என இதுபோன்ற உயிரினங்களின் பிரச்சனை என்பது அதிகமாக தான் இருக்கிறது. இந்த பிரச்சனை என்பது தற்போது தோன்றியது அல்ல. அனைவருடைய வீடுகளிலும் காலம் காலமாக இருக்கக்கூடிய ஒன்றாக தான் உள்ளது. அந்த வகையில் இத்தகைய பிரச்சனைக்கு என்ன தான் தீர்வு என்று நீங்கள் பலரும் யோசித்து இருப்பார்கள். அதிலும் ஒரு சிலர் நிறைய செயல் முறையினையும் பயன்படுத்தி இருப்பார்கள். ஆனால் அவற்றிற்கு எல்லாம் ஒரு சரியான தீர்வு என்பது கிடைத்து இருக்காது. அதனால் இன்று வீட்டில் தொல்லை செய்யும் கரப்பான் பூச்சிகளை எப்படி வராமல் தடுப்பது என்பதற்கான ஹோம் ரெமிடியினை தான் தெரிந்துக்கொள்ள போகிறோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கரப்பான் பூச்சி வராமல் இருக்க:
கரப்பான் பூச்சி தொல்லையில் இருந்து விடுப்பதற்கு யூகலிப்டஸ் எண்ணெய் ஆனது இரு சிறந்த தீர்வாக உள்ளது. அதனால் யூகலிபட்ஸ் எண்ணெயினை எவ்வாறு பயன்படுத்துவது என்று கீழே செயல் முறையில் பார்க்கலாம் வாங்க..!
டிப்ஸ்- 1
- யூகலிப்டஸ் எண்ணெய்
- தண்ணீர்
முதலில் ஒரு ஸ்ப்ரே பாட்டிலை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் பாதியளவிற்கு மேலாக தண்ணீரை நிரப்பிக் கொள்ள வேண்டும். அடுத்து அதில் 20 சொட்டு யூகலிப்டஸ் எண்ணெயினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள ஸ்ப்ரேயினை கரப்பான் பூச்சி வரும் இடத்தில் ஸ்ப்ரே செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி வீட்டிற்குள் வராது.
உங்க வீட்டு பாத்ரூமை ரொம்ப இல்லங்க வெறும் 10 நிமிடத்தில் சுத்தம் செய்யலாம் எப்படி தெரியுமா
டிப்ஸ்- 2
- வினிகர்
- தண்ணீர்
- யூகலிப்டஸ் எண்ணெய்
இப்போது நீங்கள் வினிகர் மற்றும் தண்ணீரை 2:1 பங்காக எடுத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு ஒரு பாத்திரத்தில் இதனை ஊற்றி கொண்டு அதில் 15 சொட்டு யூக்லிப்டஸ் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக இந்த கலவையினை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி கலந்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு உங்களுடைய வீடுகளில் கரப்பான் பூச்சி வரும் இடத்தில் இதனை ஸ்ப்ரே செய்வதன் மூலம் கரப்பான் பூச்சி வராமல் இருக்கும்.
குறிப்பு: இந்த ஸ்ப்ரேயினை அடிக்கும் போது உணவு மற்றும் படாதவாறு ஸ்ப்ரே செய்ய வேண்டும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |