LPG சிலிண்டர்களல் ஏற்படும் விபத்துகளை குறைப்பது எப்படி….

Advertisement

LPG Gas Cylinder-ரின் பாதுகாப்பான பயன்பட்டு முறை 

LPG Gas Cylinder-கள் ஒவ்வொரு வீட்டிலும் பயன்படுத்தப்படும் ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. நாம் வீட்டை பராமரிக்கும் போது வீட்டில் இருக்கும் அனைத்து பொருள்களையும் உரிய முறையில் பராமரிக்க வேண்டும். அப்படி தவறும் பட்சத்தில் மிகப்பெரிய இழப்புகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

அத்தகைய இழப்பை ஏற்படுத்தும் ஒரு பொருளாக மாறிவிட்டது சிலிண்டர். LPG Gas Cylinder பாதுகாப்பு முறையில் ஏதேனும் சிறிது தவறுகள் ஏற்பட்டாலும் அது மிக பெரிய பாதிப்புகளை உண்டாக்குகிறது. நாளுக்கு நாள் புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்தாலும் LPG Gas சிலிண்டர்களால் ஏற்படும் விபத்துகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இப்படி ஏற்படும் ஆபத்துகளில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள LPG Gas Cylinder பயன்பாட்டை பற்றியும், விபத்துகள் ஏற்படாமல் தடுக்க நாம் என்ன முயற்சிகள் எடுக்க வேண்டும். LPG Gas சிலிண்டர்களை எவ்வாறு பாதுகாப்பாக பயன்படுத்துவது போன்ற தகவல்களை நாம் அனைவரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். இன்று நாம் LPG Gas Cylinder பாதுகாப்பு முறையினை பற்றி தெளிவாக தெரிந்துகொள்வோம் வாருங்கள்…

how to use gas cylinders safely at home in tamil:how to use gas cylinders safely at home in tamil

  • அரசு அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளரிடம் இருந்து நீங்கள்  LPG Gas சிலிண்டர்களை  வாங்குகிறீர்களா என்பதை எப்போதும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • LPG Gas சிலிண்டர்கள் டெலிவரி செய்யும் போது சிலிண்டரில், நிறுவனத்தின் முத்திரை மற்றும் Safety Cap சரியாக உள்ளதா என்று பரிசோதித்து வாங்குங்கள்.

பாத்ரூமில் படிந்திருக்கும் கரையை 15 நிமிடத்தில் போக்க தேயிலை மர எண்ணெய் போதும்…

  • உங்களுக்கு வழங்கப்படும் LPG Gas சிலிண்டர்களின் சீல் உடைக்க பட்டிருந்தால் சிலிண்டரை முகவர்களிடம் இருந்து வாங்காதீர்கள்.
  • சிலிண்டர் ஸ்டே பிளேட்டின் உள் பக்கத்தில் குறிக்கப்பட்டுள்ள சோதனையின் இறுதித் தேதியை பார்த்து வாங்கவும்.

Lpg gas cliyder saftey tips in tmil
புதிய சிலிண்டரை பயன்படுத்த ஆரம்பிக்கும் போது சிலிண்டர் மூட்டுகள் மற்றும் சுரக்ஷா குழாய்களில் எரிவாயு கசிவு ஏற்படுகின்றத என்று சோப்பு கரைசலை குழாய்கள் மீது தடவி பார்ப்பதன் மூலம் அறிந்துகொள்ளலாம்.

நீங்கள் LPG Gas சிலிண்டர்களை பயன்படுத்தும் போது சரியான காற்றோட்டத்திற்காக சமையலறையின் கதவுகளையும் ஜன்னல்களையும் திறந்து வைக்க வேண்டும்.
சமையல் செய்யும் போது அருகில் எளிதில் தீப்பற்றக்கூடிய அல்லது பிளாஸ்டிக் பொருட்களை வைக்க வேண்டாம்.
LPG Gas சிலிண்டர் பயன்பாட்டில் இல்லாதபோது, ​​ரெகுலேட்டர் குமிழியை ஆஃப் செய்து விடவும்.

உங்கள் மொபைலை பாதுகாக்க 5 வழிகள்

எல்பிஜி ரெகுலேட்டரைத் துண்டித்து, நீங்கள் நீண்ட நாட்கள் அடுப்பை பயன்படுத்தாத போது சிலிண்டரின் பாதுகாப்பு தொப்பியை அதில் பொருத்தவும்.
வருடத்திற்கு ஒரு முறை சுரக்ஷா குழாய்களை மாற்றவும்.
ISO அங்கீகாரம் பெற்ற குழாய்கள், அடுப்புகள், ரெகுலேட்டர்கள் மற்றும் எல்பிஜி உபகரணங்களை எப்போதும் பயன்படுத்துங்கள் அதன் மூலம் விபத்தை குறைக்க முடியும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> உடல் ஆரோக்கிய குறிப்புகள்

 

Advertisement