How to Use Salt for Skin Whitening in Tamil
பொதுவாக நாம் உப்பினை சமையலுக்கு தான் பயன்படுத்தி இருப்போம். ஆனால் உப்பினை பயன்படுத்தி உங்களின் சருமத்தை பொலிவு பெற செய்யலாம் என்றால் நீங்கள் நம்புவீர்களா..? ஆம் நண்பர்களே தினமும் நமது பதிவின் மூலம் ஒரு பயனுள்ள தகவலை அறிந்து கொண்டு இருக்கின்றோம். அந்த வகையில் இன்றைய பதிவில் நாம் சமையலுக்கு பயன்படுத்தும் உப்பினை பயன்படுத்தி உங்களின் சருமத்தை எவ்வாறு பொலிவு பெற செய்வது என்பதை பற்றி விரிவாக காண இருக்கின்றோம். அதனால் இந்த பதிவை முழுதாக படித்து பயன்பெறுங்கள்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl
Benefits of Salt on Skin in Tamil:
இன்றைய காலகட்டத்தில் உள்ள சுற்றுசூழல் மாசுபாட்டின் காரணமாக பெண்களாக இருந்தாலும் சரி, ஆண்களாக இருந்தாலும் சரி அனைவரின் சருமமும் பொலிவிழந்து காணப்படுகின்றது.
அதனால் அவ்வாறு பொலிவிழந்து காணப்படும் சருமத்தை நன்கு பொலிவு பெற உதவி புரியும் சில குறிப்புகள் பற்றி பார்க்க இருக்கின்றோம். அதுவும் உப்பினை பயன்படுத்தி எவ்வாறு பொலிவிழந்த சருமத்தை மீண்டும் பொலிவு பெற செய்வது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
How to Use Salt for Skin Whitening in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உப்பு – 1 டீஸ்பூன்
- தேன் – 1 டீஸ்பூன்
மேலே கூறியுள்ள பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் சருமத்தில் தடவி 5 – 10 நிமிடங்களுக்கு உங்கள் விரல் நுனியில் மெதுவாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
பிறகு வெதுவெதுப்பான நீரினை பயன்டுத்தி உங்களின் சருமத்தை கழுவி கொள்ளுங்கள். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் சருமம் நன்கு பொலிவு பெறும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> உப்ப வச்சி முகத்தை வெள்ளையாக மாற்றலாமா
How to Use Salt for Face in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உப்பு – 1 டீஸ்பூன்
- ஆலிவ் எண்ணெய் – 1 டீஸ்பூன்
- தேங்காய் எண்ணெய் – 1 டீஸ்பூன்
மேலே கூறியுள்ள பொருட்களை ஒரு கிண்ணத்தில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள். பின்னர் அதனை உங்களின் சருமத்தில் தடவி 5 – 10 நிமிடங்களுக்கு உங்கள் விரல் நுனியில் மெதுவாக மசாஜ் செய்து கொள்ளுங்கள்.
பிறகு வெதுவெதுப்பான நீரினை பயன்டுத்தி உங்களின் சருமத்தை கழுவிக் கொள்ளுங்கள். இவ்வாறு வாரத்திற்கு இரண்டு முறை தொடர்ந்து செய்து வருவதன் மூலம் உங்களின் சருமம் நன்கு பொலிவு பெறும்.
Skin Whitening Tips at Home Naturally in Tamil:
முதலில் இதற்கு தேவையான பொருட்களை பற்றி பார்க்கலாம்.
- உப்பு – 1 டீஸ்பூன்
- தண்ணீர் – 100 மி.லி
முதலில் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் 100 மி.லி தண்ணீரை ஊற்றி ஓரளவு சூடுபடுத்தி கொள்ளுங்கள். பிறகு அதனுடன் 1 டீஸ்பூன் உப்பினை சேர்த்து நன்கு கலந்து கொள்ளுங்கள்.
பின்னர் அதனை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் சேர்த்து உங்களின் சருமத்தில் அவ்வப்போது தெளித்து வந்தீர்கள் என்றால் உங்களின் சருமம் நன்கு புத்துணர்ச்சியுடனும், பொலிவுடனும் இருக்கும்.
இதையும் படித்துப்பாருங்கள்=> வீட்டில் கல் உப்பை பயன்படுத்தும் போது இந்த தவறை மட்டும் செய்யவே கூடாது ஏன் தெரியுமா
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |