ரொம்ப ஒல்லியா இருக்கீங்களா..? இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!

உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ்

உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ் | Weight Gain Tips in Tamil..! 

வணக்கம் பொதுநலம்.காம் பதிவின் இனிமையான நேயர்களே… எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருக்கிறீர்களா…? என்ன செய்தாலும் உடல் எடை ஏறவில்லை என்று கவலை படுகிறீர்களா..? கவலையை விடுங்கள், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஒல்லியாக இருக்கும் உங்களுக்காக இந்த பதிவில் உடல் எடை அதிகரிக்க சில டிப்ஸ் பற்றி பார்க்க போகிறோம். வாங்க நண்பர்களே இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

உடல் எடை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்:

சிலர் எவ்வளவு சாப்பிட்டாலும் ஒல்லியாகவே இருப்பார்கள். அவர்களால் கனமான பொருட்களை கூட தூக்குவதற்கு சிரமப்படுவார்கள். சிலர் ரொம்பவும் சோர்வாக காணப்படுவார்கள். உடல் எடையை கூட்ட வேண்டும் என்று எத்தனையோ முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். அப்படி உடல் எடை அதிகரிக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த பதிவு பயனுள்ளதாக இருக்கும். உடல் எடை அதிகரிக்க இதோ உங்களுக்காக சில டிப்ஸ்..!

டிப்ஸ் -1: 

அதிகளவு தண்ணீர் குடிக்க வேண்டும். ஒரு நாளைக்கு போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். சாப்பிடுவதற்கு முன் அதிகளவு தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். சாப்பிடும் முன் தண்ணீர் குடிப்பதால் உங்களுக்கு பசி எடுக்கும் உணர்வு இல்லாமல் போய்விடும்.

டிப்ஸ் -2:

நன்றாக தூங்க வேண்டும். தினமும் சரியான நேரத்தில் தூங்குவதால் உங்கள் உடலில் உள்ள ஹார்மோன்கள் சரியாக வேலை செய்ய தொடங்கும். அதனால் உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

10 நாளில் உடல் எடை அதிகரிக்க உணவு அட்டவணை

டிப்ஸ் -3: 

உடல் எடை அதிகரிக்க உதவும் உணவு பொருள் தான் தயிர். பாலில் இருந்து தயாரிக்கப்படும் இந்த தயிரில் அதிகப்படியான புரோட்டீன் சத்துக்கள் இருப்பதால் இது உடல் எதையோ அதிகரிப்பதற்கு  உதவுகிறது. ஹார்மோன்கள் அதிகரிக்கும் தன்மையை தயிர் கொண்டதால் இது உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. தினமும் நீங்கள் சாப்பிடும் உணவுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும்.

டிப்ஸ் -4: 

தினமும் நீங்கள் நாட்டு சர்க்கரையை உணவில் சேர்த்து சாப்பிட்டு வருவதால் உடல் எடை அதிகரிக்க உதவுகிறது. தினமும் 2 வேளை பாலுடன் நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பதால் உடல் எடை அதிகரிக்கிறது. அதேபோல் பாலுடன் தேன் கலந்து குடிப்பதாலும் உடல் எடை அதிகரிக்கும்.

டிப்ஸ் -5:

ஒல்லியாக இருப்பவர்களின் உடல் எடை அதிகரிக்க புரதசத்து அதிகம் நிறைந்த உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும். தசைகளின் வளர்ச்சியை அதிகரிக்க புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும்.

இதுபோன்ற உடல் நலம் மற்றும் ஆரோக்கியம் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—>udal edai athikarikka tips