இட்லி மாவு புளிக்க என்ன செய்ய வேண்டும்
பெரும்பாலானவர்கள் வீட்டில் காலை மற்றும் இரவு உணவாக இருப்பது இட்டலி தோசை தான். இதற்கு மாவை தினமும் அரைக்க மாட்டார்கள். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை தான் அரைப்பார்கள். சிலரது வீட்டில் வாரத்தில் ஒரு நாள் அரைத்து வைத்து விட்டு பயன்படுத்துவார்கள். வெயில் காலமாக இருந்தால் மாவு புளித்து விடுகிறது என்று கவலைப்படுவார்கள். அதுவே மழைக்காலம் மற்றும் குளிர்காலம் வந்தால் மாவு புளிக்க மாட்டிங்குதே என்று கவலைப்படுவார்கள். அதனால் தான் இந்த பதிவில் மாவு புளிப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இட்லி மாவு புளிக்க என்ன செய்ய வேண்டும்:
டிப்ஸ்:1
முதலில் மாவை அரைத்து உப்பு போட்டு கரைத்து வைக்க வேண்டும். இதில் மேல் பகுதியில் காய்ந்த மிளகாய் 4 அல்லது 5 வைக்கவும். முக்கியமாக காய்ந்த மிளகாயை காம்புகளோடு போட வேண்டும். இதனை நன்றாக மூடி போட்டு மூடி அடுப்பிற்கு பக்கத்தில் 2 மணி நேரம் வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்றாக புளித்து வந்திருக்கும்.
லேப்டாப்பில் படிந்து இருக்கும் தூசியை இப்படி தான் சுத்தம் செய்யனுமா..!
டிப்ஸ்:2
நீங்கள் அரைத்து வைத்துள்ள மாவை வெயில் உள்ள இடத்தில் திறந்து வைக்க வேண்டும். இதனை 2 மணி நேரம் வைக்க வேண்டும். 2 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு பொங்கி வந்திருக்கும். இதனை பயன்படுத்தி இட்லி, தோசை ஊற்றி சாப்பிடலாம்.
டிப்ஸ்:3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விட வேண்டும். இதன் உள்பகுதியில் அரைத்து வைத்த மாவை 1/2 மணி நேரம் வைக்க வேண்டும். 1/2 மணி நேரம் கழித்து பார்த்தால் மாவு நன்றாக புளித்திருக்கும்.
துருப்பிடித்த பாத்ரூம் பைப்களை 10 நிமிடத்தில் பளிச் என்று மாற்ற என்ன செய்யலாம்
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |