Idli Maavu Pulika Tips in Tamil
இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தில் உள்ள ஆண் பெண் என அனைவருமே வேலைக்கு செல்கிறார்கள். அதனால் அனைவரின் காலை பொழுதும் மிகவும் பரபரப்பாகவே இருக்கும். ஏனென்றால் நாம் நமது வேலைக்கு தயாராகி கொண்டிருப்போம். மேலும் நமது குழந்தைகள் தங்களது பள்ளிகளுக்கு மற்றும் கல்லூரிக்கு தயாராகி கொண்டிருப்பார்கள். இதே நேரத்தில் நமக்கும் நமது குழந்தைகளுக்கு தேவையான உணவினையும் தயாரிக்க வேண்டும். அதனால் நாம் அனைவருக்குமே காலை உணவாக நினைவிற்கு வருவது இட்லி மற்றும் தோசை தான். அதனால் அதற்கான மாவினை நமது வீடுகளிலேயே அரைத்து கொள்வோம். அப்படி நாம் அரைத்து வைத்துள்ள மாவு நன்கு புளித்தால் மட்டுமே நம்மால் தோசையோ இட்லியோ தயாரிக்க முடியும். ஆனால் மழைக்காலம் வந்துவிட்டால் போதும் நாம் அரைத்து வைத்துள்ள மாவு சரியாக புளிக்கவே புளிக்காது. அதனால் தான் இன்றைய பதிவில் மழைக்காலத்தில் கூட நாம் அரைத்து வைத்துள்ள இட்லி மாவு மிகவும் குறைந்த நேரத்திலேயே புளிக்க உதவும் ஒரு சில குறிப்புகளை பற்றி விரிவாக காணலாம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
மாவு புளிக்க என்ன செய்ய வேண்டும்:
மிகவம் எளிமையான முறையில் மழைக்காலத்தில் இட்லி மாவு நன்கு புளிக்க உதவும் ஒரு சில குறிப்புகளை பற்றி விரிவாக இங்கு காணலாம் வாங்க..
டிப்ஸ் – 1
முதலில் நாம் அரைத்து வைத்துள்ள இட்லி மாவில் தேவையான அளவு உப்பு போட்டு நமது கைகளை பயன்படுத்தி நன்கு கரைத்து கொள்ளுங்கள். பின்னர் அதனின் மீது நன்கு முதல் ஐந்து காய்ந்த மிளகாயை ஆங்காங்கே போட்டு நன்கு காற்று புகாத அளவிற்கு மூடி வைத்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் மாவு வெறும் இரண்டு முதல் மூன்று மணிநேரத்திற்குள் மாவு நன்கு புளித்துவிடும்.
மாதக்கணக்கில் புதினா கேட்டு போகாமல் இருக்க டிப்ஸ்
டிப்ஸ் – 2
முதலில் தேவையான அளவு நன்கு சூடாக வெந்நீர் போட்டு கொள்ளுங்கள். பின்னர் அகலமான பாத்திரத்தில் அந்த வெந்நீரை ஊற்றி கொள்ளுங்கள். பிறகு நாம் உப்பு போட்டு கரைத்து வைத்துள்ள இட்லி மாவு பத்திரத்தினை அந்த வெந்நீர் பாத்திரத்தின் மீது வைத்து அதனை நன்கு கற்று புகாத அளவிற்கு மூடி வைத்து கொள்ளுங்கள்.
இதன் மூலம் இட்லி மாவானது மிகவும் குறைவான நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
டிப்ஸ் – 3
அடுப்பில் ஒரு குக்கரை நன்கு மூடி போட்டு மூடிவைத்து அதன் மீது உள்ள விசிலினை எடுத்துவிட்டு நன்கு சூடுபடுத்தி கொள்ளுங்கள். பின்னர் அதனின் உள்ளே நாம் அரைத்து உப்பு போட்டு கரைத்து வைத்துள்ள மாவினை வைத்து நன்கு மூடிபோட்டு விசில்லை போட்டு மூடி வைத்து கொள்ளுங்கள்.
இதனின் மூலமும் மாவு குறைவான நேரத்தில் நன்கு புளித்துவிடும்.
2 மாதங்கள் வரை வெங்காயம் கெட்டுபோகாமல் இருக்க இதை மட்டும் ட்ரை பண்ணுங்க
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |