இட்லி மாவு, தோசை மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Idli Maavu Pulikamal Iruka Tips

மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? | Idli Maavu Pulikamal Iruka Tips

ஹாய் பிரண்ட்ஸ் வணக்கம்.. பொதுவாக அனைவரது வீட்டிலேயும் இட்லி மாவு, தோசை மாவு அரைக்கும் பழக்கம் இருக்கும். அப்படி அறைந்து வைக்கும் மாவு உடனே புளித்துவிடும். புளித்த மாவை யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. இதன் காரணமாக பலர் மாவு புளித்துவிட்டது என்றால் வீணாக கீழேதான் ஊற்றுவார்கள். இதனால் காசு கொடுத்து வாங்கிய பொருட்கள் தான் வீணாகும். இனி இட்லி மற்றும் தோசைக்கு அரைக்கும் மாவு புளிக்காமல் இருக்க மூன்றுவிதமான டிப்ஸை பற்றி தான் பார்க்க போகிறோம். சரி வாங்க பதிவை தொடர்ந்து படித்து தெரிந்துகொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

டிப்ஸ்: 1இட்லி மாவு

வெயில் காலத்தில் இட்லி அல்லது தோசைக்கு மாவு அரைக்கும் போது. மாவு அரைத்த ஒரு மணி நேரத்திற்குள் பிரிட்ஜியில் வைத்துவிடவும். பிரிட்ஜி இல்லை என்றால் ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீர் நடுவில் மாவு பாத்திரத்தை வைக்கவும். இப்படி வைப்பதன் மூலம் மாவு சீக்கிரம் புளித்து போவதை தவிர்க்க முடியும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
தோசை முறுவலாக வரவேண்டுமா? அப்போ இந்தாங்க டிப்ஸ்..!

டிப்ஸ்: 2

இட்லி மாவு அரைத்தவுடன் தேவையான அளவு மட்டும் மாவு எடுத்து அதில் உப்பு போட்டு கரைத்துக்கொள்ளுங்கள். மீதமுள்ள மாவை அப்படியே பிட்ஜியில் ஸ்ட்ரோ செய்து வைத்துக்கொள்ளுங்கள். இப்படி செய்வதினால் மாவு அவ்வளவு சீக்கிரம் புளிக்காது.

டிப்ஸ்: 3

இந்த குறிப்பும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதாவது மாவு அரைத்த உடன் அதில் வெற்றிலையை அந்த மாவில் இரண்டு அல்லது மூன்று போட்டு மூடி வைக்கவும். வெற்றிலையின் காம்பு மாவின் உள்ளே இருக்குமாறு வைக்க வேண்டும். இப்படி வெற்றியலை வைத்தாலும் இட்லி மாவு அவ்வளவு சீக்கிரம் புளிக்காது.

மேல் கூறப்பட்டுள்ள மூன்று டிப்ஸில் ஏதாவது ஒன்றை ட்ரை செய்து பாருங்கள் கண்டிப்பாக பயனுள்ளதாக இருக்கும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
சமைத்த உணவில் உப்பு அதிகமாகி விட்டால் கவலை வேண்டாம்! இத பண்ணா போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 Tips in Tamil