இட்லி மாவு புளிக்காமல் இருக்க
நம்முடைய வீடுகளில் எல்லாம் பெரும்பாலும் இட்லி மற்றும் தோசை தான் அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு இந்த இரண்டு உணவுகளை செய்ய வேண்டும் என்றால் அதற்க்கு கட்டாயமாக இட்லி மாவு அல்லது தோசை மாவு அரைக்க வேண்டும். தோசை மாவு அரைப்பது என்னவோ கொஞ்சம் எளிமையாக இருந்தாலும் கூட அதனை புளிக்காமல் பார்த்து கொள்வது தான் மிகவும் கடினம். ஏனென்றால் என்ன தான் நாம் பார்த்து பார்த்து இட்லி மாவினை அரைத்தாலும் கூட மாவு மிகவும் ஈசியாக புளித்து விடும். அதுவும் இப்போது வெயிலின் தாக்கம் வேறு அதிகமாக இருக்கிறது. அப்படி என்றால் சொல்லவே வேண்டாம் மாவும் சட்டென்று புளித்து விடும். ஆகவே இன்று இட்லி மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதற்கான டிப்ஸினை தான் இந்த பதிவின் வாயிலாக தெரிந்துக்கொள்ள போகிறோம்.
இட்லி மாவு புளிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்:
குறிப்பு- 1
நீங்கள் குறைந்தது அரிசி மற்றும் உளுந்தினை மூன்று மணி நேரமாவது ஊற வைக்க வேண்டும். அதைவிட மிகவும் குறைவாக ஊறினால் பிறகு மாவு புளித்து போக வாய்ப்பு உள்ளது. ஆகையால் இதனை சரியாக செய்ய வேண்டும்.
குறிப்பு- 2
உளுந்து அரைக்கும்போது கைவிடாமல் தண்ணீர் இடையிடையே தெளித்து தெளித்து கையினை பயன்படுத்தாமல் ஒரு பிளாஸ்டிக் கரண்டி அல்லது மரக்கரண்டி எடுத்து தள்ளி விட்டு அரைக்கலாம்.
மேலும் உளுந்து அரைத்து முடித்ததும், கைகளை ஒரு முறை நன்கு சுத்தம் செய்து விட்டு உளுந்தை எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளுங்கள். மாவினை அள்ளும் போது மட்டும் கையினை பயன்படுத்திக் கொள்ளலாம்.
10 பேருக்கு காளான் பிரியாணி செய்ய தேவையான பொருட்கள் மற்றும் அளவுகள்
குறிப்பு- 3
அடுத்து கிரைண்டரில் அரிசியை அரைக்கவும், அரிசியையும் கைபடாமல் அரைக்கவும். அரிசி அரைத்து முடிந்ததும் மாவை கிரைண்டரில் எடுக்காமல் ஏற்கனவே நாம் அரைத்து எடுத்து வைத்திருந்த உளுந்து மாவினையும் அரிசியுடன் சேர்த்து ஒரு 5 நிமிடம் அளவிற்கு அரைத்து எடுக்க வேண்டும்.
குறிப்பு- 4
மாவு ஒன்றோடு ஒன்றாக கலந்த பிறகு மாவு ஸ்டோர் செய்யும் பாத்திரத்தில் கைபடாமல் மாவை எடுத்துக்கொண்டு உப்பு சேர்க்காமல் ஸ்டோர் செய்து கொள்ளுங்கள். மீதமுள்ள மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உப்பு சேர்க்காமல் உள்ள மாவினை மூடி வைத்து ஃப்ரிட்ஜில் அப்படியே எடுத்து வைத்து விடுங்கள்.
ஃப்ரிட்ஜில் இருக்கும் ஸ்டோர் செய்து வைத்த மாவை உங்களுக்கு எப்போது தேவையோ, அப்போது மட்டும் வெளியே எடுத்து வைத்து உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளலாம்.
மேலும் நீங்கள் பயன்படுத்துவதற்கு 4 மணி நேரத்திற்கு முன் வெளியே எடுத்து வைத்து விடுங்கள். அப்போது தான் உங்களுக்கு தேவையான அளவுக்கு மாவு புளித்து வரும்.
குறிப்பு- 5
உளுந்து மற்றும் அரிசி அரைக்கும் போது தேவையான அளவு தண்ணீர் தெளித்துவிடுகையில் ஐஸ் வாட்டரை பயன்படுத்துவது மிகவும் சிறந்தது.
இட்லி மாவு நீண்ட நாட்கள் புளிக்காமல் இருக்க சில்வர் பாத்திரங்களை பயன்படுத்துவதற்கு பதில் பிளாஸ்டிக் டப்பாவை பயன்படுத்துவது சிறந்த தேர்வாக இருக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |