வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

Induction அடுப்பினை ஈஸியாக சுத்தம் செய்வது எப்படி?

Updated On: January 13, 2023 9:33 AM
Follow Us:
induction stove cleaning tips in tamil
---Advertisement---
Advertisement

Induction Stove Cleaning Tips in Tamil

உங்கள் வீட்டில் உள்ள Induction அடுப்பானது அழுக்குகள் படிந்து கறையுடன்  காணப்படுகிறதா? அடுப்பில் பால் வைத்து விட்டு கவனம் இல்லாமல் இருப்பதால் பாலானது பொங்கி அடுப்பு முழுவதும் வழிந்துவிடும். பின் சமைக்கும்போது ஏதாவது கறைகள் படுதல் போன்றவற்றால் Induction அடுப்பில் கறைகள் ஏற்படுகிறது. பலரும் அதனை சுத்தம் செய்வதே இல்லை? அதனை எவ்வாறு சுத்தம் செய்வது என்று தெரியவில்லையா? கவலை வேண்டாம் வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே ஈஸியாக சுத்தம் செய்துவிடலாம். இப்பதிவில் பார்க்க இருப்பது induction அடுப்பினை  சுத்தம் செய்வது எப்படி என்பதனை பற்றித்தான். இந்த டிப்ஸ் கண்டிப்பாக உங்களுக்கு பயன்படும்!

தேவையான பொருட்கள்:

  • வினிகர்
  • பேக்கிங் சோடா
  • பல் துலக்க பயன்படுத்தும் கோல்கேட் பேஸ்ட்
  • எலுமிச்சை – பாதி அளவு
  • பயன்படுத்திய பல் துலக்கும் பிரஸ்

செய்முறை:

ஸ்டேப் 1:

முதலில் ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு வினிகர் ஊற்ற வேண்டும்.

ஸ்டேப் 2:

அதனுடன் பேக்கிங் சோடாவை சேர்க்க வேண்டும். சேர்த்த உடனே நுரை போன்று பொங்கி வரும். நுரை அடங்கும் வர சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.

ஸ்டேப் 3:

induction maintenance tips in tamil

நுரை அடங்கிய பின்னர் தேவைக்கேற்ப கோல்கேட் பேஸ்ட் சேர்க்கவும். பின் பிரஸினை கொண்டு நன்கு கலந்து விடவும்.

ஸ்டேப் 4:

பிறகு அதனுடன் பாதி எலுமிச்சை பழத்தை பிழிந்து விட வேண்டும். பின் அதனை நன்கு கலந்து விட வேண்டும்.

induction maintenance tips in tamil

உங்கள் வீட்டு பாத்ரூமில் உள்ள அனைத்து உப்புக்கறைகளையும் நீங்க இதை ட்ரை பண்ணுங்க..!

சுத்தம் செய்யும் முறை:

அடுப்பின் முன் பக்கம் சுத்தம் செய்யும் முறை:

induction maintenance tips in tamil

நாம் தயார் செய்து வைத்துள்ள கலவையை பிரஸில் நனைத்து சிறிது சிறிதாக  Induction அடுப்பின் முன் பக்கம் முழுவதும் அப்ளை செய்ய வேண்டும். பின்புறம் செல்லாதவாறு கவனமாக அப்ளை செய்ய வேண்டும். ஏனென்றால் பின்புறம்(Coil), கூலிங் ஃபேன் இருப்பதால் அவற்றின் மீது படாதவாறு அப்ளை செய்ய வேண்டும்.

induction maintenance tips in tamil

பின் Scrubber பயன்படுத்தி கறைகள், அழுக்குகள் போக நன்றாக தேய்த்து விட வேண்டும். இடுக்குகளில் இருக்கும் அழுக்கினை தேய்க்க பிரஸினை பயன்படுத்துங்கள். தேய்த்து விட்ட பின்னர் துணி அல்லது Tissue Paper பயன்படுத்தி நன்றாக துடைத்து எடுக்கவும்.

அடுப்பின் பின்  பக்கம் சுத்தம் செய்யும் முறை:

induction maintenance tips in tamil

பின் புறம் துடைக்க தண்ணீர் பயன்படுத்தக்கூடாது. ஃபேனில் ஓட்டடை, தூசுக்கள் போன்றவை தங்கி இருக்கும் அதனை ஈரமில்லாத பிரஸ் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

முழுமையாக சுத்தம் செய்த உடன் அடுப்பினை சிறுது நேரம் வெயிலில் காய வைக்க வேண்டும்.

அடுப்பானது கறைகள் நீக்கப்பட்டு புதிது போன்று இருக்கும். கண்டிப்பா இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க!

இதையும் படியுங்கள் => கறை பிடித்துள்ள கேஸ் Stand புதியது போல பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil

 

Advertisement

Ramya

Hello, I'm Ramya Current working in Pothunalam.com Since 4 months, Interested topics to be cover, Technology Tips, Tamil Lang useful tips, Recruitment News, Education based articles and many more. Kindly email me if you're interested. Thank you!.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

How to Clean Oily Vessels at Home in Tamil

எண்ணெய் பிசுபிசுப்பு உள்ள பாத்திரங்களை கை வைக்காமலே சுத்தம் செய்யலாமா..? இத்தனை நாளா இந்த Trick தெரியமா போச்சே..!

Tiles Cleaning Liquid At Home in Tamil

அழுக்கு படிந்த டைல்ஸ் தரையை பளிச்சென்று மாற்ற இந்த ஒரு பொருள் மட்டும் போதும்..!

summer hair care tips in tamil

வெயில் காலத்தில் உங்களின் முடியை எப்படி பாதுகாத்து கொள்ளவேண்டும் தெரியுமா..!

keeping house cool in extreme heat without ac in tamil

வெயில் காலத்தில் வீட்டை இப்படி மாத்துங்க.! ஏசியே வேண்டாம் வீடு சும்மா குளுகுளுன்னு இருக்கும்..

online trading how to avoid mistakes in online trading in tamil

ஆன்லைனில் பொருட்களை வாங்கும் போது தவறுகளை தவிர்ப்பது எப்படி..?

How To Prevent Phone From Overheating in Tamil

வெயில் காலத்தில் ஸ்மார்ட்போன் ஹீட் ஆகி வெடிக்காமல் இருக்க இந்த டிப்ஸ் Follow பண்ணுங்க

How To Sleep Better in Summer in Tamil

கோடைகாலத்தில் நிம்மதியாக தூங்க டிப்ஸ்..!

வெயில் காலத்தில் செடிகளை பராமரிக்க இம்முறைகளை பின்பற்றுங்கள்..!

Foods to Avoid in Summer in Tamil 

வெயில் காலத்தில் தப்பி தவறியும் இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள்..!