Induction Stove பயன்படுத்துபவரா நீங்கள்..? அப்போ இந்த தவறை மட்டும் செய்யாதீங்க..!

induction stove use tips in tamil

Induction Stove Use Tips

இன்றைய பதிவில் அனைவருக்கும் பயன்படும் ஒரு டிப்ஸ் பற்றி தான் கூறப்போகிறோம். அந்த காலத்தில் தான் மண் அடுப்பு, விறகு அடுப்பு எல்லாம் பயன்படுத்தி வந்தார்கள். ஆனால் இந்த காலகட்டத்தில் அப்படியில்லை, அனைவரின் வீடுகளிலும் கேஸ் அடுப்பு, கரண்ட் அடுப்பு என்று வந்துவிட்டது.

அதனால் மக்கள் அதன் மூலம் சமையலை சுலபமாக செய்து வருகிறார்கள். அதுபோல மக்கள் அனைவரும் அதிகமாக கரண்ட் அடுப்பை பயன்படுத்தி வருகிறார்கள். அப்படி கரண்ட் அடுப்பு வைத்திருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. இந்த பதிவை முழுவதுமாக படித்து Induction Stove எப்படி பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்..!

Induction அடுப்பினை ஈஸியாக சுத்தம் செய்வது எப்படி?

Induction Stove எப்படி பயன்படுத்த வேண்டும்..? 

டிப்ஸ் -1

 induction stove

முதலில் உங்கள் Induction Stove -யை சுத்தமான இடத்தில் வைக்க வேண்டும். அதன் பிறகு இந்த அடுப்பின் அடியில் வட்டமாக இருக்கும். அது எப்பொழுதும் சுத்தமாக இருக்கிறதா என்று பார்த்து கொள்ள வேண்டும்.

ஏனென்றால், அடுப்பின் உள்ளே இருக்கும் காயில் எப்பொழுதும் சூடாக இருக்கும். அந்த சூட்டை குறைக்க வேண்டும் என்பதற்காக தான் அந்த இடத்தில் Fan கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த Fan சுற்றும் பொழுது அதில் தூசிகள் படிந்து காற்று வெளியேறாமல் போய்விடும். அதனால் காயில் சீக்கிரமாகவே பழுந்தடைந்துவிடும். அதனால் கரண்ட் அடுப்பின் அடியில் தூசி படியாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

டிப்ஸ் -2 

Induction Stove plag

சிலர் கரண்ட் அடுப்பை பயன்படுத்திவிட்டு அந்த அடுப்பின் பிளக்கை அப்படியே கரண்ட் போர்டில் வைத்து விடுவார்கள். ஆனால் அப்படி செய்வது மிகவும் தவறான ஓன்று.

ஏனென்றால், அதுபோல செய்வதால் பிளக்கில் உள்ள அந்த Pin -ல் சேதம் ஏற்பட்டு Induction Stove ஒர்க் ஆகாமல் போய்விடும். அதனால் எப்பொழுதும் Induction Stove -யை பயன்படுத்திவிட்டு அதன் பிளக்கை கழட்டி வைத்து விட வேண்டும்.

கேஸ் ரிப்பேர் ஆகாமலும், புதிதாகவே இருப்பதற்கு இதை கட்டாயம் கடைபிடியுங்கள்

டிப்ஸ் -3 

ஒரு சிலர் Induction Stove -யை பயன்படுத்தி கொண்டிருக்கும் போது, சமைத்து முடித்தவுடனே சுவிட்ச் -யை OFF செய்வார்கள். ஆனால் அப்படி செய்ய கூடாது. சமைத்து முடித்தவுடன் Induction Stove -ல் இருக்கும் OFF பட்டனை நிறுத்திவிட்டு தான் மேல் இருக்கும் சுவிட்ச் -யை OFF செய்ய வேண்டும். இப்படி செய்தால் உங்கள் Induction Stove நீண்ட நாட்கள் வரை வரும்.

டிப்ஸ் -4 

Induction Stove -ல் சமைத்து கொண்டிருக்கும் போது அதில் எதுவும் பொங்கி ஊற்றி விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். அதுபோல அடுப்பை சுத்தம் செய்வதற்கு தண்ணீர் ஊற்ற கூடாது. ஒரு துணியை தண்ணீரில் நனைத்து பிழிந்து விட்டு அதன் பிறகு துடைக்க வேண்டும்.

இதுபோல உங்கள் Induction Stove -யை பயன்படுத்தி வந்தால் உங்கள் Induction Stove நீண்ட நாட்கள் வரை நீடித்து வரும்.

இதையும் படியுங்கள் => கறை பிடித்துள்ள கேஸ் Stand புதியது போல பளபளக்க இதை ட்ரை பண்ணுங்க..!

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil