Ingredients that Should not be Ground in a Mixer in Tamil
நாம் தினமும் மிக்சியில் சட்னி, மசாலா பொருள்களை அரைப்பதற்கு மிகவும் உதவுகிறது. அதிலும் ஏதேனும் சமையலுக்கு அரைக்க வேண்டும் என்றால் உடனே மிக்சி தான் நினைவிற்கு வருகிறது. ஆனால் ஒரு சில பொருளை கண் மூடித்தனமாக மிக்சி ஜாரில் சேர்த்து அரைப்பதனால் மிக்சி பாழாகி விடும். அதனால் எந்தெந்த பொருளை மட்டும் மிக்சியில் சேர்த்து அரைக்க கூடாது என்று கீழே பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👉 https://bit.ly/3Bfc0Gl |
முழு மசாலா பொருட்கள்:
பலரும் இன்ஸ்டன்ட் மசாலா பொருட்களை வாங்கி, அதனை வீட்டில் ஃபிரெஷாக அரைப்பதனால் உணவுகள் சுவையாக இருக்கும் என்று நினைப்பார்கள். இப்படி அரைத்து கொண்டே இருந்தால் மிக்சி பழுதாகி விடும். அதனால் நீங்கள் அம்மியில் அரைத்து விட்டு அதன் பின் மிக்சியில் சேர்த்து அரைப்பதன் மூலம் மிக்சி பழுதாகாமல் நல்ல நிலையில் இருக்கும்.
உங்க வீட்டுல உள்ள கிரைண்டர் ரிப்பேர் ஆகாமல் நீண்ட நாட்களுக்கு இருக்க வேண்டுமா..?
காபி கொட்டைகள்:
ஒரு சிலர் சுத்தமான மற்றும் ஆரோக்கியமாக இருப்பதற்கு காபி கொட்டைகளை வாங்கி, அதனை தூள் செய்கிறார்கள். காபி கொட்டைகளை தூள் செய்வதற்கு மிக்சியை பயன்படுத்த கூடாது. ஏனெனில் காபி கொட்டைகளை மிக்சியில் அரைப்பதனால் மிக்சியில் உள்ள பிளேடுகளில் சிக்கி கொண்டு மிக்சி பழுதாகி விடும். அதனால் காபி கொட்டையை அரைப்பதற்கு காபி கிரைண்டர் பயன்படுத்துவது நல்லது.
குளிர் சார்ந்த பொருட்கள்:
கோடை காலத்தில் ஷேக்ஸ், ஜூஸ், ஸ்மூத்திகள் செய்யும் போது, ஐஸ் உறைந்த பொருளை சேர்த்து அரைத்து வருகிறார்கள். அதனை மிக்சியில் சேர்த்து அரைப்பதன் மூலம் மிக்சியில் உள்ள பிளேடுகள் மற்றும் கொள்கலன் பழுதாகி விடும். அதனால் மிக்சியில் குளிர்ந்த மற்றும் உறைந்த பொருட்களை அரைக்க கூடாது.
சூடான பொருட்கள்:
அவசரமாக வெளியில் செல்ல வேண்டுமென்றால் சட்னி அரைப்பதற்கு வதக்கி வைத்திருந்தால் அதனை சூட்டோடு சேர்த்து அரைத்து விடுவோம். சூடான பொருள் மிக்சியில் அழுத்தத்தை தரும், அதனால் மிக்சி ஜார் வெடிக்கும் நிலை ஏற்படுகிறது. சூடான பொருட்கள் ஆறியதும், அதனை மிக்சியில் சேர்த்து அரைத்தால் மிக்சி நீண்ட காலத்திற்கு உழைக்கும்.
மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 | Tips in Tamil |