இஞ்சி நீண்ட நாட்கள் வர
நம் வீட்டு சமயலறையில் உள்ள மளிகை பொருட்கள் அல்லது காய்கறிகள் அழுகி வீணாகும் போது நமக்கு நிச்சயம் கஷ்டமாக இருக்கும். அதற்கான சரியான காரணம் தெரியாதபோது இன்னும் கஷ்டமாக இருக்கும். இது இஞ்சிக்கும் சேர்த்து தான். உணவில் வாசனைக்காக அதிகம் சேர்க்கப்படுகிறது. இஞ்சி டீயும் அதிகமாக குடிப்பார்கள். இஞ்சியின் விலையானது ஏறும், இறங்கும், அதனால் இதனை தினமும் வாங்க மாட்டடோம். வாரத்தில் ஒரு நாள் அல்லது 10 நாட்களுக்கு ஒரு முறை வாங்குவோம். இப்படி வாங்கும் போது ரொம்ப நாட்களுக்கு இஞ்சி நன்றாக இருக்க வேண்டும் என்று தான் நினைப்போம். அதனால் தான் இந்த பதிவில் இஞ்சி நீண்ட நாட்கள் வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்வோம் வாங்க..
| உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இஞ்சி கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்: 1

கடையிலிருந்து வாங்கி வந்த இஞ்சியை நன்றாக கழுவ வேண்டும். கழுவும் போது அதிலிருந்து அழுக்குகள் எல்லாம் நீங்கும். அதாவது ஒரு முறை கழுவிய பிறகு அப்படியே விட்டு விட கூடாது. நீங்கள் கழுவுகின்ற நீரானது அழுக்கு இல்லாமல் வெள்ளையாக இருக்கும் வரை கழுவ வேண்டும்.
அதன் பிறகு கழுவிய இஞ்சியை சிறிய சிறிய துண்டுகளை நறுக்கி விட்டு ஈரம் இல்லாமல் துடைத்து கொள்ளவும். அதன் பிறகு ஒரு டிஸ்சு பேப்பர் எடுத்து அதன் உள்பகுதியில் வைத்து விட வேண்டும்.
மாதக்கணக்கில் கொத்தமல்லி கெடாமல் இருக்க 1 ஸ்பூன் மஞ்சள் மட்டும் போதும்..!
இதனை மூடி போட்ட டப்பாவில் வைத்து எத்தனை நாளைக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். முக்கியமாக டப்பாவில் கற்று போகாதவாறு இருக்க வேண்டும்.
இஞ்சி கெட்டு போகாமல் இருக்க டிப்ஸ்: 2
ஒரு மண் சட்டி எடுத்து கொள்ளவும். அதில் ஆற்று மணலை நிரப்பி கொள்ளவும். மணலானது காய்ந்து இருக்காமல் அதில் சிறிதளவு தண்ணீர் ஈரப்பதமாக இருக்க வேண்டும்.
அதன் மேல் பகுதியில் வாங்கி வந்த இஞ்சியை சொருக வேண்டும். இப்படி வைப்பதனால் இஞ்சி கெட்டு போகாமல் நீண்டன நாட்கள் வரைக்கும் பயன்படுத்தலாம்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
ஒரு வருடமானாலும் தேங்காய் கெட்டு போகாமல் இருக்க சால்ட் மட்டும் போதுமா
| மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |














