இன்டர்வியூ டிப்ஸ் | Interview Tips in Tamil
நாம் எந்த வேலைக்கு சென்றாலும் நிச்சயம் நேர்காணல் தேர்வு இருக்கும். இன்டர்வியூவில் வெற்றி பெறுவதற்கும், தோல்வி அடைவதற்கும் பல்வேறு காரணங்கள் உண்டு. படிப்பு, மதிப்பெண்கள் இவைகளை தாண்டி உங்களுடைய நடை, உடை, கேள்விக்கு பதில் சொல்லும் விதம், உங்களுடைய பேச்சு என சொல்லிக் கொண்டே போகலாம். நேர்காணலில் நாம் சரியாக Performance செய்தால் தான் நமக்கு வேலை கிடைக்கும். ஒரு சிலர் இன்டர்வியூ என்றாலே அதிகம் பயப்படுவார்கள், அப்படிபட்டவர்கள் நேர்காணலில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று இந்த தொகுப்பில் விரிவாக படித்து தெரிந்துகொள்வோம் வாங்க.
டிப்ஸ்: 1
- நேர்காணலில் மிக முக்கியமான விஷயம் என்னெவென்றால் அது Eye Contact தான்.
- நேர்காணல் செய்பவர் உங்களை தொடர்பு கொள்ளும் போது, அவர்களின் கண்களைப் பார்த்து பதிலளியுங்கள்.
டிப்ஸ்: 2
- நேர்முகத் தேர்வில் பேசத் தொடங்கும் போது நம்பிக்கையுடன் கைக்கொடுக்க வேண்டும். நிமிர்ந்து உட்கார்ந்து, நேராகப் பார்க்க வேண்டும்.
- இன்டர்வியூவிற்கு செல்லும்போது சிறிதும் பயமில்லாமல் செல்லுங்கள். பயம் இன்றி இயல்பாக நடப்பது வெற்றியை சுலபமாக்கும்.
டிப்ஸ்: 3
Nerkanal Tips and Tricks in Tamil: நேர்காணலுக்கு செல்வதற்கு முன்பு உங்களின் Resume-ஐ நன்றாக படித்து கொள்ளுங்கள், ஏனனெனில் Resume-ல் உள்ள கேள்விகள் தான் உங்களிடம் கேட்பதற்கான வாய்ப்பு அதிகம்.
டிப்ஸ்: 4
- இன்டர்வியூவில் முதலில் கேட்கும் கேள்வி என்றால் உங்களை பற்றிய கேள்வியாக தான் இருக்கும் (Talk about Yourself) அதற்கு உங்களுடைய பதில் நிறுவனத்தை பற்றியும், நீங்கள் செய்ய போகும் வேலை பற்றியதாகவும் இருக்க வேண்டும்.
டிப்ஸ்: 5
- நீங்கள் எந்த நிறுவனத்திற்கு வேலை தேட போகிறிர்களோ, அந்த நிறுவனத்தை பற்றிய சில விஷயங்களை தெரிந்து வைத்து கொள்ளுங்கள், அப்பொழுது தான் நீங்கள் எந்த அளவிற்கு வேலையில் ஈடுபாடு காட்டுகிறிர்கள் என்று மேலாளருக்கு தெரியும்.
டிப்ஸ்: 6
- நீங்கள் படித்த துறைக்கு சம்மந்தம் இல்லாமல் ஏதோ ஒரு நிறுவனத்திற்கு வேலைக்கு போகிறிர்கள் என்றால், கண்டிப்பாக உங்களிடம் மேலாளர் எதற்கு இந்த துறையை தேர்ந்தெடுத்தீர்கள் என்று கேட்பார்கள்.
- அதற்கு நீங்கள் துறையின் மேல் உள்ள ஆர்வத்தையும் மற்றும் நீங்கள் செய்த Experiment போன்றவற்றை எடுதுரைக்க வேண்டும்.
டிப்ஸ்: 7
- ஆடை அணியும் முறை நேர்த்தியான ஃபார்மல் உடைகளை அணிவது சிறப்பு. தலை முடியை சரிசெய்து, உடைக்கேற்ற காலணிகளை அணிய வேண்டும்.
டிப்ஸ்: 8
- உங்களுக்கு தெரியாத கேள்விகள் ஏதாவது கேட்டால் அதற்கு நேர்மையாக பதிலளியுங்கள்.
- தேர்வாளர்கள் கேட்கும் கேள்விகளைத் தெளிவாகப் புரிந்துகொண்டு, சிறந்த பதிலை அளிக்க வேண்டு்ம்.
டிப்ஸ்: 9
- உங்களுடைய பலம் மற்றும் பலவீனம் இரண்டையும் தெளிவாக எடுத்து கூறுங்கள். உங்கள் நோக்கம் சற்று இராஜதந்திரமாக இருக்க வேண்டும்.
- அப்பொழுதுதான் உங்களால் மேலாளரை கவர முடியும்.
டிப்ஸ்: 10
- உங்களுடைய பொழுதுபோக்கு பற்றி கேட்டால் பாட்டு கேட்பது, நடனம் ஆடுவது என்று சொல்லாமல் புத்தகம் படிப்பது, Software பற்றி தெரிந்து கொள்கிறேன் என்று சொல்ல வேண்டும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் Today Useful Information In Tamil புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Tips in Tamil |