Intraday Trading in Tamil
பொதுவாக ஷேர் மார்க்கெட்டில் படித்தவர்கள் மட்டுமே ஈடுபட முடியும் என்று பலர் நினைக்கின்றன. ஆனால் அது முற்றிலும் தவறான விஷயம் ஆகும். ஷேர் மார்க்கெட் என்றால் பாதாள கிணறு என்றும், அதில் விழுந்தால் எழ வாய்ப்பே இல்லை என்பது போன்ற தகவல்கள் மக்களிடையே அதிகம் பரப்பப்பட்டுள்ளன. இதனால், பெரும்பான்மையான நபர்கள் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய தயங்குகின்றன. அதேபோல் இன்னொரு முக்கிய காரணம் என்ன என்றால் ஷேர் மார்க்கெட் பற்றி அவ்வளவு பெரிதாக யாருக்கும் போதிய அளவு புரிதல் இல்லாமை எனலாம். இதற்கு படிப்பு தேவையில்லை சரியான புரிதல் இருந்தாலே போதும், ஷேர் மார்க்கெட்டில் நீங்களும் வெற்றிபெறமுடியும்.
நீங்கள் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்ய விரும்பு தபராக இனத்தால் முதலில் இன்ட்ராடே டிரேடிங் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். இன்ட்ராடே டிரேடிங் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் இந்த பதிவு உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். சரி வாங்க இந்த பதிவில் இன்ட்ராடே டிரேடிங் என்றால் என்ன? என்பதை பற்றி தெரிந்துகொள்வோம்.
இன்ட்ராடே டிரேடிங் என்றால் என்ன?
இன்ட்ராடே வர்த்தக்கம் என்பது பங்குகளை வாங்கி, விற்பது குறித்த விஷயங்களை ஒரே நாளில் நிறைவடைந்துவிடும். ஆங்கிலத்தில் இதனை ஸ்கொயர்டு ஆப் (squared-off). இந்த வர்த்தகத்தில் ஓனர்ஷிப்கோர முடியாது. இன்ட்ராடே டிரேடிங் என்பது ஒரு காலத்தில் தொழில்முனைவோர் மற்றும் படித்தவர்கள் மட்டுமே செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால், தொழில்நுட்பங்களின் வளர்ச்சியின் காரணமாக, டிஜிட்டல் பயன்பாட்டில் யார் வேண்டுமானாலும் இன்ட்ராடே டிரேடிங்கில் ஈடுபடலாம் என்ற நிலை தற்போது உருவாகியுள்ளது.
ஷேர் வித்தியாசங்கள்:
வழக்கமான வர்த்தகத்துக்கும், இன்ட்ராடே வர்த்தக்கத்துக்கும் ஒரே ஒரு வித்தியாசம் மட்டுமே இருக்கிறது அது என்னவென்றால் இன்ட்ராடே பங்கு வர்த்தகத்தில் ஒரே நாளில் உங்களின் நிலையை அறிந்து கொள்ளமுடியும். பங்குகளை வாங்குவதும், விற்பனை செய்வதும் ஒரே நாளில் நிறைவடைந்துவிடும். இதில், பங்குகளின் ஓனர்ஷிப்பில் மாற்றம் இருப்பதில்லை. ஆக நீங்கள் வழக்கமான பங்குகளில் நீங்கள் தேவையான நேரத்தில் அல்லது குறிப்பிட்ட நாட்களுக்குள் விற்பனை செய்து கொள்ளலாம்.
யார் ஈடுபடலாம்?
இந்த இன்ட்ராடே பங்குசந்தை செய்ய விரும்புவர்கள், ரிஸ்க எடுக்க தயாராக இருப்பவர்களாக இருக்க வேண்டும். சந்தை நிலவரத்தை உன்னிப்பாக மற்றும் தினசரி கவனிப்பவராக இருப்பவர்கள் மட்டுமே இந்த டிரேடிங்கில் ஈடுபட முடியும். பகல் நேரத்தில் நீங்கள் வேறொரு பணியில் இருக்கிறீர்கள் என்றால், உங்களுக்கு இன்ட்ரா டே டிரேடிங் சரியாக இருக்காது. ஆக சந்தை நிலவரத்தை மிக மிக உன்னிப்பாக கவனித்து வர வேண்டும்.
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👉👉 தினமும் 1000 ரூ மேல் Share Market-ல் எளிதாக சம்பாதிக்கலாம்
இவற்றில் உள்ள ஆபத்து என்ன?
இந்த இன்ட்ராடே-வில் மிக அதிகளவு ஆபத்துகள் நிறைந்த பங்கு வர்த்தகம் ஆகும். இதில் உங்களை கவரத்திலும் வகையில் அதிக ரிட்டன்ஸ் வருதற்கும் வாய்ப்புள்ளது. அதேநேரத்தில், பங்கு டெலிவரியில் அதிக ஆபத்துகளும் நிறைந்திருக்கின்றன. சரியான சமயத்தில் பங்குகளை விற்பனை செய்வது குறித்த புரிதல் மற்றும் டெக்னிக்கல் விஷயங்களை தெரிந்திருக்க வேண்டும். சரியான நேரத்தில் முடிவு எடுக்கத் தவறினால் மிகப்பெரிய விலையை நீங்கள் இழக்க வேண்டியதாக இருக்கும்.
இன்ட்ராடே டிரேடிங்யில் எப்படி வெற்றி பெறலாம்?
இன்ட்ராடே வர்த்தகத்தில் தேர்ந்த நபராக இருக்கும் இடைத்தரகர் உதவியுடன் இந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம். அவரிடம் இருந்து டெக்னிக்கல் உதவிகளை பெற்றுகொண்டால், சரியான முடிவெடுக்க உங்களுக்கு வசதியாக இருக்கும்.
இவற்றில் எப்படி பங்குகளை தேர்வு செய்யலாம்?
இந்த பங்கு வர்த்தகத்தில் நீங்கள் ஒரே நாளில் நிறைவு செய்ய வேண்டும் என்பதால், அதிக விற்பனையாகும் அல்லது நல்ல உயர்வை சந்திக்கும் பங்குகளை வாங்குவது நல்லது. இருப்பினும், அந்த பங்குகளை டெலிவரி செய்வதிலும் சில சிக்கல்கள் உள்ளன. மற்ற பங்குகளை வாங்கி மிகப்பெரிய இழப்பை சந்திப்பதை விட, அதிக விற்பனையாகும் பங்குகளை வாங்கும்போது ரிஸ்க் குறைவாகும் என்று சொல்லப்படுகிறது.
சரியான நேரத்தில் முடிவெடுக்கும் திறன் இருக்க வேண்டும்:
இன்ட்ரா டே வர்த்தகத்தில் நேரம் மிக மிக முக்கிய பங்கு வகிக்கிறது. தவறான நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களை மிகப்பெரிய இழப்புக்கு கொண்டு செல்லும் அல்லது லாபத்தை இழக்க வேண்டியதாக இருக்கும்.
இதன் நன்மைகள் என்ன?
- முதலீட்டை விட அதிக லாபத்தை சம்பாதிக்கலாம்.
- இடைத்தரகர் கட்டணம் மிகமிக குறைவு
- சரியான நேரத்தில் நீங்கள் எடுக்கும் முடிவின் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும்.
இன்ட்ராடே டிரேடிங் எப்படி தொடங்குவது?
முதலில் நீங்கள் டீ மேட் அக்கவுண்ட் தொடங்க வேண்டும். உங்களிடம் ஏற்கனவே இருந்தாலும் இன்ட்ரா டேவுக்காக இன்னொரு அக்கவுண்ட் தொடங்க வேண்டியதாக இருக்கும். இன்ட்ரா டே வர்த்தகத்துக்காக இருக்கும் சரியான செயலிகளை தேர்தெடுத்து, அதன் வழியாக டெக்னிக்கல் உதவிகளை பெற்றுக்கொள்ளுங்கள். சில செயலிகள் வரிவிலக்கு தொடர்பான தகவல்களையும் உங்களுக்கு கொடுத்து உதவுகின்றன தினம் தோறும் வர்த்தகங்களை நன்கு கவனியுங்கள்.
மேலும் முதலீடு பற்றிய டிப்ஸ், ஆலோசனை, தகவல்கள், திட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் → | முதலீடு |