Iyengar Puliyodharai Powder Recipe
வணக்கம் நண்பர்களே.. இப்பதிவில் அனைவர்க்கும் பிடித்த ஐயங்கார் வீட்டு புளியோதரை பொடி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொள்ளலாம். பொதுவாக புளியோதரை என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவு. அதிலும், ஐயர் வீட்டு புளியோதரை என்றால் சொல்லவா வேண்டும்.. உடனே நாவில் எச்சில் ஊரும்.. எனவே நீங்களும் அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஐயங்கார் வீட்டு புளியோதரை பொடி எப்படி செய்வது என்பதை தெரிந்து கொண்டு சமைத்து மகிழுங்கள்.
கோவில் பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரை அனைவர்க்கும் பிடித்த பிரசாதமாக இருக்கும். கோவிலில் செய்யும் ஐயர் புளியோதரை மாறியே உங்கள் வீட்டிலும் செய்ய வேண்டுமா அப்போ இந்த பதிவை பாருங்கள். ஐயர் வீட்டு புளியோதரையை சுவையாக எப்படி செய்ய வேண்டும் என்று தெரிந்துகொண்டு நீங்களும் ட்ரை பண்ணி பாருங்கள்.
Puliyodharai Podi Seivathu Eppadi:
தேவையான பொருட்கள்:
- கடலை பருப்பு – 1/3 கப்
- உளுத்தம் பருப்பு – 1/4 கப்
- கொத்தமல்லி விதைகள் –2 டீஸ்பூன்
- எள் – 2 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- வெந்தயம் – 1 தேக்கரண்டி
- கறிவேப்பிலை – 2 கொத்து
- சிவப்பு மிளகாய் – 15
ஐயங்கார் புளியோதரை பொடி:
ஸ்டேப் -1
முதலில் அடுப்பில் ஒரு வாணலை வைத்து மிதமான தீயில் வைத்து கொள்ளுங்கள். அதில் கடலை பருப்பு மற்றும் உளுத்தம் பருப்பு சேர்த்து நன்கு சிவரும் வரை வறுத்து தனியாக எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -2
அடுத்து கொத்தமல்லி விதைகள், எள், வெந்தயம், மிளகு மற்றும் கருவேப்பிலை மற்றும் சிகப்பு மிளகாய் சேர்த்து நன்கு வறுத்து எடுத்து கொள்ளுங்கள். கருவேப்பிலை சேர்க்கும்போது நன்கு உலரவைத்து (தண்ணீர் இல்லாமல்) சேர்க்க வேண்டும்.
ஸ்டேப் -3
இவை அனைத்தும் நன்கு வறுபட்டதும், அதனை இறக்கி சிறிது நேரம் ஆறவைத்து கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடியாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
ஸ்டேப் -4
அவ்வளவுதாங்க.. மணமணக்கும் ஐயர் வீட்டு புளியோதரை பொடி ரெடி..! இந்த பொடியை நீங்கள் புளியோதரை சாதம் செய்யும்போது எடுத்து பயன்படுத்தி கொள்ளலாம்.
மேலே குறிப்பிட்டுள்ள முறையில் ஐயர் வீட்டு புளியோதரை சாதத்தை செய்து பாருங்கள். சுவையான புளியோதரை சாதம் சுலபமாக செய்யலாம்.
ஐயர் வீட்டு சாம்பார் ருசியா இருக்கிறதுக்கு இதான் காரணமா.!
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |