Iyer Veetu Idli Podi Seivathu Eppadi
பொதுவாக இட்லி என்றாலே பெரும்பாலான நபருக்கு சாம்பார் தான் பிடிக்கும். அந்த வகையில் இட்லிக்கு தேங்காய் சட்னி, கார சட்னி, புதினா சட்னி, தக்காளி சட்னி மற்றும் பூண்டு சட்னி என இவ்வாறு பல வகையான சட்னிகளை செய்து வைத்தாலும் கூட ஏதோ ஒரு மிஸ் ஆகிறதே என்று தான் நம் மனம் ஆனது தேடும். இவ்வாறு தேடுவது வேறு ஒன்றும் இல்லை இட்லி பொடியை தான். ஏனென்றால் என்ன தான் வித விதமான சட்னி வகைகள் வைத்து இருந்தாலும் கூட இட்லி பொடி இருந்தால் இன்னும் 4 இட்லி கூட சாப்பிடலாம் என்று தான் கூறுவார்கள். அதிலும் சாதாரணமாக செய்யும் இட்லி பொடியை விட ஐயர் வீட்டு சுவையில் இட்லி பொடியினை தான் விரும்புவார்கள். ஆகையால் இன்று சுவையான ஐயர் வீட்டு இட்லி பொடி செய்வது எப்படி என்று தான் பார்க்கப்போகின்றோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
இட்லி பொடி தேவையான பொருட்கள்:
- காய்ந்த மிளகாய்- 15
- எள்ளு- 1 ஸ்பூன்
- சீரகம்- 1 ஸ்பூன்
- உளுந்து- 1/2 கப்
- கடலை பருப்பு- 1/4 கப்
- பூண்டு- 6 பல்
- பெருங்காயத்தூள்- 1/4 ஸ்பூன்
- கறிவேப்பிலை- 1 கைப்பிடி அளவு
- எண்ணெய்- தேவையான அளவு
- உப்பு- தேவையான அளவு
ஐயர் வீட்டு இட்லி பொடி:
பொருட்களின் அளவு | செய்முறை விளக்கம் |
கடாயில் எண்ணெய் சேர்த்தல் | முதலில் அடுப்பை பற்ற வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணையை காய விட வேண்டும். |
பருப்பு மற்றும் எள் சேர்த்தல் | 5 நிமிடம் கழித்து கடலை பருப்பு மற்றும் எள் சேர்த்து நன்றாக பொன் நிறம் வரும் வரை வறுக்கவும். |
இதர பொருட்களை சேர்த்தல் | அதன் பிறகு கடாயில் உள்ள பொருளுடன் வைத்துள்ள சீரகம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மீண்டும் நன்றாக வறுத்து கொள்ளவும். |
பூண்டு சேர்த்தல் | கடைசியாக இந்த பொருளுடன் பூண்டு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் 10 நிமிடம் வறுக்கவும். |
பொருட்களை ஆற வைத்தல் | வறுத்த பொருட்கள் அனைத்தினையும் நன்றாக ஆற வைக்க வேண்டும். |
மிக்சி ஜாரில் பொருட்களை சேர்த்தல் | இப்போது ஆற வைத்துள்ள பொருட்களை மிக்சி ஜாரில் சேர்த்து தண்ணீர் இல்லாமல் பொடியாக அரைத்து கொள்ள வேண்டும். |
இட்லி பொடி தயார் | அவ்வளவு தான் சுவையான ஐயர் வீட்டு இட்லி பொடி தயார். |
ஐயர் வீட்டு வத்த குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள்!!! |