ஐயர் வீட்டு வத்த குழம்பு ஒரு முறை இப்படி செஞ்சு பாருங்க..

Advertisement

ஐயர் வீட்டு வத்த குழம்பு

ஏதவாது ஒரு சுப நிகழ்ச்சியில் சைவ சாப்பாடு என்றாலே அப்படி இருக்கும். அதுவும் சாம்பார் போட்ட பிறகு அடுத்து வத்த குழம்பு தான். வத்த குழம்பு நிறைய நபருக்கு பிடித்தமான ஒன்றாக இருக்கிறது. அதிலும் ஐயர் வீட்டில் எந்த உணவு சமைத்தாலும் அதன் ருசி தனியாக தான் இருக்கும். எப்படி தான் இப்படி சமைக்கிறார்கள் என்று ஆலோசித்து கொண்டு இருப்போம்.  அந்த வகையில் உங்களுக்கு உதவும் வகையில் ஐயர் வீட்டு வத்த குழம்பு செய்வது எப்படி என்று அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை:

வத்த குழம்பு செய்ய தேவையான பொருட்கள் வத்த குழம்பு செய்முறை
மணத்தக்காளி வத்தல் இல்லையென்றால் உங்கள் வீட்டில் உள்ள வத்தல்- 10 அடுப்பில் கடாய் வைத்து 3 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி வத்தலை சேர்த்து வதக்கி தனியாக எடுத்து கொள்ளவும்.
தக்காளி- 2 அதே கடாயில் வெந்தயம், பெருஞ்சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவை சேர்த்து வதக்கி கொள்ளவும். அதனுடனே கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும்.
பூண்டு- 6 பற்கள்
புளி- இரு எலுமிச்சை அளவு
மிளகாய் தூள்- 3 தேக்கரண்டி வெங்காயம் நிறம் மாறியதும் தக்காளி சேர்த்து வதக்கவும். வதங்கியதும் 1/2 தேக்கரண்டி மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், பூண்டு மற்றும் மிளகு சிறிதளவு சேர்த்து நச்சு எடுத்ததையும் சேர்த்து வதக்கவும்.
மல்லி தூள்- 2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் -1/2 தேக்கரண்டி
பெஞ்சீரகம்- 1 தேக்கரண்டி அதனுடனே புளி தண்ணீர் சேர்க்க வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
வெந்தயம் – 1 தேக்கரண்டி
கருவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு ஒரு 20 நிமிடம் கழித்து பார்த்தால்  குழம்பு நன்றாக கொதித்து எண்ணெய் பிரிந்த நிலையில் வந்திருக்கும், அப்போது அடுப்பை அணைத்து விடவும். அவ்ளோ தாங்க ஐயர் வீட்டு வத்த குழம்பு தயார்.!
மிளகு- 1 தேக்கரண்டி

சளி, இருமல் மற்றும் தொண்டை வலி சரியாக இந்த குழம்பு வைத்து சாப்பிடுங்கள்

இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> சமையல் குறிப்புகள்!!!
Advertisement