பலாப்பழம் வாங்கிட்டு வந்தீங்களா..? அப்போ இந்த டிப்ஸை பயன்படுத்தி அதை பிசுபிசுப்பு இல்லாமல் எடுங்க..!

Advertisement

பலாப்பழம் எடுக்க டிப்ஸ் | Jackfruit Without Sticking Tips in Tamil

வாசகர்களுக்கு வணக்கம்..! உங்களிடம் ஒரு கேள்வி. என்னவாக இருக்கும் என்று யோசிப்பீர்கள். அதுவேறவொன்றும் உங்களுக்கு பழங்கள் என்றால் பிடிக்குமா..? பொதுவாக பழங்கள் என்றால் சிலருக்கும் பிடிக்கும் சிலருக்கு பிடிக்காது. அதாவது சிலருக்கு சில பழங்கள் மட்டும் தான் பிடிக்கும். அப்படி பலன்கள் அனைத்தும் இனிப்பு சுவை கொண்டவை என்று சொல்ல முடியாது. ஆனால் பழங்களில் அதிக இனிப்பு சுவை கொண்ட பழம் என்றால் அது பலாப்பழம் தான். சரி உங்களுக்கு பலாப்பழம் பிடிக்குமா..? அப்போ பலாப்பழத்தை பார்த்தால் வாங்கி வந்து விடுவீர்கள் அப்படி தானே..! வாங்கி வருவது விசயம் இல்லை. அதை வெட்டி எடுப்பது தான் பிரச்சனை. அதனால் இன்று பலாப்பழத்தை பிசுபிசுப்பு இல்லாமல் எடுக்க டிப்ஸ் பற்றி பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

பலாப்பழத்தை பிசுபிசுப்பு இல்லாமல் எடுக்க டிப்ஸ்..!  

தேங்காய் எண்ணெய் பயன்படுத்தவும்:

பலாப்பழம் எடுக்க டிப்ஸ்

பலாப்பழத்தை வெட்டும் போது கைகள் மற்றும் வெட்டும் கத்தியில் தேங்காய் எண்ணெயை தடவி கொள்ள வேண்டும். இல்லையென்றால் அதிலிருக்கும் ஒரு வகை பிசின் கத்தியை வீணாக்கி விடும். எனவே தேங்காய் எண்ணெய் தடவி கொள்ளவும்.

பலாப்பழம் வெட்டும் முறை:

பலாப்பழம் வெட்டும் முறை

நீங்கள் பலாப்பழம் வாங்கி வந்து வெட்டுவதற்கு முன் தரையில் நியூஸ் பேப்பரை போட வேண்டும். பிறகு அதன் மேல் பலாப்பழத்தை வைத்து வெட்ட வேண்டும். இல்லையென்றால் அதில் இருந்து வரும் பால் தரையில் ஊற்றி ஒட்ட ஆரம்பித்து விடும்.

கெமிக்கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழத்தை எப்படி கண்டறிவது.. இதோ உங்களுக்காக சில டிப்ஸ்

அதுபோல பலாப்பழம் வெட்ட பயன்படுத்தப்படும் கத்தி கூர்மையானதாக இருக்க வேண்டும். அப்போது தான் பலாப்பழத்தை சிரமம் இல்லாமல் வெட்ட முடியும். மேலும் பலாப்பழம் நழுவாமல் இருக்கும்.

பழத்தை எப்படி வைக்க வேண்டும்:

பழத்தை எப்படி வைக்க வேண்டும்

பழத்தை இரண்டாக பிளந்த பின், பலாப்பழத்தின் நடுவில் இருக்கும் பிசுபிசுப்புகளை ஒரு பேப்பரை வைத்து ஒற்றி எடுத்து கொள்ள வேண்டும். பிறகு கைகளில் தேங்காய் தடவி ஈஸியாக எடுத்து விடலாம்.

பலாப்பழ சுலைகளை எடுத்த பின்னர் ஒரு கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் பலாப்பழ சுலைகளை போட வேண்டும்.

அவ்வளவு தான் இதுபோன்ற முறைகளை நீங்கள் செய்தால் பலாப்பழத்தை அழகாக எடுத்து அருமையாக சுவைக்கலாம்.

வெங்காயம் சீக்கிரமாவே கெட்டுபோய் விடுகிறதா.. அப்போ இதை ட்ரை பண்ணுங்க

 

மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் Tips
Advertisement