தித்திக்கும் ஜிலேபி
நாம் நம்முடைய வீட்டில் மாலை நேரங்களில் இனிப்பு மற்றும் கார வகையான ரெசிபிக்களை செய்து சாப்பிடுவோம். அதிலும் குறிப்பாக அனைவருடைய வீட்டிலும் எதாவது ஒரு வகை இனிப்பு பலகாரம் செய்யுவோம். ஆனால் ஒரு முறையாவது ஜிலேபி செய்து சாப்பிட்டு இருக்கீர்களா..? அதனால் இன்றைய ரெசிபி பதிவில் தீபாவளி ஸ்பெஷல் ஜிலேபி செய்வது எப்படி என்றும் அதற்கு தேவையான பொருட்கள் என்னவென்று தான் பார்க்கப்போகிறோம். ஆகவே பதிவை தொடர்ந்து படித்து வந்தால் போதும் ஜிலேபி செய்ய தெரியாமல் இருப்பவர்கள் உடனே கற்று கொள்ளலாம். வாருங்கள் பதிவிற்கு செல்லலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே: https://bit.ly/3Bfc0Gl |
தீபாவளி ஸ்பெஷல் ஜிலேபி:
தேவையான பொருட்கள்:
மைதா – 1 கப்
சோள மாவு – 3/4 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் – 1/4 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – நிறத்திற்காக
தயிர்- 1/4 கப்
தண்ணீர் – 1/4 கப்
சர்க்கரை – 1/2 கப்
எலுமிச்சை சாறு – 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் – 1/2 தேக்கரண்டி
குங்குமப்பூ – 7
உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் எடுத்துவைத்துள்ள மைதாவை சேர்த்து அதனுடன் சோள மாவு சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் அதனுடன், பேக்கிங் பவுடர், உங்களின் விருப்ப நிறத்திற்கு ஏற்ப கலர் பொடி (மஞ்சள் தூள்) சேர்த்து அதனுடன் தயிர் சேர்த்து நன்றாக கிளறவும்.
பின்னர் அத்துடன் தேவைக்கேற்ப தண்ணீர் சேர்த்து மாவுகள் கட்டிகள் இல்லாமல் இட்டலி மாவை விட சற்று அடர்த்தியாக மாற்றிக்கொள்ளவும்.
இந்த மாவை நன்றாக காற்று போகாதவாறு மூடி, 24 மணி நேரம்வரை புளிக்க வைக்கவும்.
24 மணி நேரங்கள் கழித்து அதன் மூடியை அகற்றி பார்த்தல் சிறிய குமிழ்கள் தோன்றி ஒரு புளிப்பு வாசனை உருவாகி இருக்கும்.
இப்போது அந்த மாவை நன்றாக கிளறி, அதனை ஜிலேபி மேக்கரில் மாற்றிக்கொள்ளவும்.
சர்க்கரை பாகு தயாரித்தல்:
மறுபுறம் ஜிலேபிக்கான சர்க்கரை பாகு தயாரிக்க வேண்டும்.
ஒரு கடினமான பாத்திரத்தில் சர்க்கரை சேர்த்து அதன் பாதி அளவு தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
அதில் ஏலக்காய் பொடி,எலும்பிச்சை சாறு, மற்றும் குங்குமப்பூ சேர்த்து பாகு தன்மை வரும் வரை கொதிக்க விடவும்.
பின்னர் ஒரு கடாயில் நன்றாக சூடாக்கி ஜிலேபி பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி அதில் ஜிலேபி மேக்கர் உதவியுடன் ஜிலேபி பொறித்து எடுக்கவும்.
பின்னர் இந்த ஜிலேபிகளை தயாரித்துவைத்துள்ள சர்க்கரை பாகுவில் சேர்த்து சில நிமிடங்கள் ஊற வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான தித்திக்கும் திகட்டாத ஜிலேபி தயார்.
அவ்வளவு தாங்க ஜிலேபி இப்படி தான் செய்யணும். நீங்களும் உங்க வீட்டுல ட்ரை பண்ணி டேஸ்ட் எப்படி இருக்குனு பாருங்க.
இதுபோன்ற சுவையுள்ள சமையல் குறிப்புகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | சமையல் குறிப்புகள் |