ஜீன்ஸ் பேண்ட் நிறம் மாறாமல் இருக்க
ஆடைகளை வாங்குவது என்றாலே எப்பொழுதும் மகிழ்ச்சி தான். அதில் ஆண்கள் பெண்கள் என்ற வேறுபாடு எல்லாம் கிடையாது. குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஆடைகள் என்றால் வாங்கி கொண்டே தான் இருப்போம். அந்த வகையில் இப்போது பெரும்பாலோனருக்கு இந்த ஜீன்ஸ் மோகம் அதிகரித்து விட்டது. இந்த ஜீன்ஸ் ஆடை வந்த புதிதில் ஆண்கள் மட்டும் பெருமளவில் இதை பயன்படுத்தி வந்தார்கள், ஆனால் இப்போதெல்லாம் பெண்களும் இந்த ஆடையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். இப்போது இதே ஜீன்ஸ் துணியை வைத்து பல்வேறு ஆடைகள் வந்து விட்டது. அதிக விலை கொடுத்து வாங்கும் ஜீன்ஸ் ஆனது சீக்கிரமே நிறம் மாறிவிடுகிறது. அதனால் இதனை தடுப்பதற்கு இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
ஜீன்ஸ் நிறம் மாறாமல் இருக்க:
முதலில் ஜீன்ஸ் பேண்ட் நிறம் மாறாமல் இருப்பதற்கு அடிக்கடி துவைக்க கூடாது. அடிக்கடி துவைத்தால் ஜீன்ஸின் நிறம் மாறும். அப்போ எதனை நாளுக்கு ஒரு தடவை துவைக்க வேண்டும் என்ற கேள்வி வரலாம்.
நீங்கள் ஜீன்ஸ் பேண்டை 10 முறை துவைக்காமல் பயன்படுத்த வேண்டும். அதுவரைக்கும் ஜீன்ஸ் பேண்ட் நாற்றம் வராத என்று கேட்கிறீர்கள். அதாவது நீங்கள் ஜீன்ஸ் பேண்ட் பயன்படுத்திய பிறகு உள்பக்கமாக பிரட்டி வெயிலில் காய வைத்துவிட வேண்டும். இப்படி செய்வதால் வியர்வை நாற்றம் நீங்கும்.
துணிகளில் படிந்துள்ள விடாப்பிடியான கறைகளை நீக்க உப்புடன் இதை மட்டும் கலந்து தடவுங்க..
10 நாட்களுக்கு பிறகு துவைக்க வேண்டும் என்று நினைத்தால் அழுக்கு உள்ள இடத்தில் மட்டும் சோப்பை பயன்படுத்தி தேய்க்க வேண்டும். உள்பக்கமாக பிரட்டி சோப்பை போட்டு தேய்க்க வேண்டும். அதன் பிறகு தண்ணீரில் அலசி விட்டு காய போடும் போது உள்பக்கமாகவே பிரட்டி காய போட வேண்டும். இப்படி செய்வதால் நிறம் மாறாமல் இருக்கும்.
நேரடியாக சூரிய வெளிச்சம் படும்போது சீக்கிரம் ஜீன்ஸ் வெளுத்து போகிவிடும். முக்கியமாக ஜீன்ஸை ஊற வைத்து துவைப்பதை தவிர்க்க வேண்டும்.
பிசுபிசுப்பான கேஸ் பர்னர் நிமிசத்தில் புதியது போல் மாற்ற இத Try பண்ணிப்பாருங்க…
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |