கழுத்து மற்றும் கை, கால் முட்டிகளில் இருக்கும் கருமை நீங்க இந்த டிப்ஸ் ட்ரை பண்ணுங்க..!

Advertisement

Kaluthu Karumai Neenga Tips in Tamil

இன்றைய பதிவில் கழுத்து மற்றும் கை, கால் முட்டிகளில் இருக்கும் கருமையை போக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தான் பார்க்க போகிறோம். நாம் முகத்தை எப்படி பராமரிக்கின்றோமோ அதேபோல கழுத்து மற்றும் கை கால்களையும் பராமரிக்க வேண்டும். சிலர் பார்ப்பதற்கு நல்ல கலராக இருப்பார்கள். ஆனால் கழுத்து பகுதி கருமையாக இருக்கும்.

அதேபோல கை கால் முட்டிகளும் கருமையாக இருக்கும். அந்த கருமையை போக்க வேண்டும் என்பதற்காக கடைகளில் கிடைக்கும் இரசாயனம் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த கருமையை நாம் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சரி செய்யலாம். அது எப்படி என்று பார்க்கலாம் வாங்க..!

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

கழுத்து மற்றும் கை கால் முட்டியில் இருக்கும் கருமை நீங்க டிப்ஸ்: 

  1. அரிசி மாவு – 2 ஸ்பூன்
  2. துருவிய தேங்காய் – தேவையான அளவு
  3. எலுமிச்சை பழசாறு – 2 ஸ்பூன்

ஸ்டேப் -1

Kaluthu Karumai

முதலில் ஒரு மிக்சி ஜாரில் அரிசிமாவு 2 ஸ்பூன், துருவிய தேங்காய் உங்களுக்கு தேவையான அளவு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்த்து மைபோல அரைத்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2

பின் இதை கழுத்து, கை, கால் முட்டிகள் போன்ற கருமை உள்ள இடங்களில் தடவ வேண்டும். தடவி 10 நிமிடம் அப்படியே இருக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3

இதுபோல தொடர்ந்து செய்து வந்தால் கழுத்து பகுதியில் இருக்கும் கருமை நீங்கி விடும். அல்லது இந்த முறையை நீங்கள் வாரத்திற்கு 2 முறை கூட செய்து வரலாம்.

 அரிசி மாவில் இருக்கும் சத்துக்கள் இறந்த செல்களை நீக்கும் தன்மையை கொண்டுள்ளது. தேங்காய் தோலை மென்மையாக வைத்திருக்கும் பண்புகளை கொண்டுள்ளது. எலுமிச்சை சாறு கருமையை போக்க கூடியது. அதனால் இந்த டிப்ஸை ஒருமுறை செய்து பாருங்கள்.  
சருமம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள கருமைகள் நீங்க அழகு குறிப்பு..!

கழுத்தில் இருக்கும் கருமை நீங்க:

kaluthu karumai neenga tips

  1. பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்
  2. கடலை மாவு – 2 ஸ்பூன்
  3. கஸ்தூரி மஞ்சள் – 1 ஸ்பூன்
  4. எலுமிச்சை பழசாறு – 2 ஸ்பூன்

ஸ்டேப் -1 

முதலில் ஒரு கிண்ணத்தில் பேக்கிங் சோடா 1 ஸ்பூன் அளவு எடுத்து கொள்ளுங்கள். பின் அதில் ஒரு ஸ்பூன் அளவு தண்ணீர் ஊற்றி கெட்டியாக கலந்து கொள்ளுங்கள். பின் அதை கழுத்து பகுதியில் தடவி 10 நிமிடம் வரை வைத்திருந்து பின் அதை கழுவி கொள்ளுங்கள்.

ஸ்டேப் -2 

karumai neenga tips

பின் ஒரு கிண்ணத்தில் கடலை மாவு, கஸ்தூரி மஞ்சள் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.

ஸ்டேப் -3 

பின் இதை கருமை உள்ள இடங்களில் தடவி 20 நிமிடம் அப்படியே வைத்துருக்க வேண்டும். 20 நிமிடம் கழித்து நீரால் கழுவி கொள்ள வேண்டும்.

இதுபோல வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால் கழுத்து மற்றும் கைகால் முட்டிகளில் இருக்கும் கருமை மறைய தொடங்கும்.

கழுத்தில் இருக்கும் கருமை நிறம் மறைய சூப்பர் டிப்ஸ்..!
அக்குள் கருமை நீங்க இயற்கை அழகு குறிப்புகள்..!

 

இதுபோன்று புது புது அழகு குறிப்புகள் 1000 தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty tips in tamil
Advertisement