கண்பார்வை பல மடங்கு அதிகரிக்க டிப்ஸ்..!

Advertisement

கண்பார்வை அதிகரிக்க டிப்ஸ்

அனைவருக்கும் இனிய வணக்கங்கள் நண்பர்களே..! இன்றைய பதிவில் நாம் அனைவருக்கும் மிகவும் பயனுள்ள தகவலை பற்றி தான் பார்க்க இருக்கின்றோம். அப்படி என்ன தகவல் என்றால் நமது கண்பார்வை அதிகரிக்க என்ன செய்வது என்பதை பற்றி தான். இன்றைய காலகட்டத்தில் நாம் அதிகமாக பயன்படுத்தக்கூடிய மொபைல் போன்,தொலைக்காட்சி, கணினி போன்றவற்றிலிருந்து வரக்கூடிய கதிர்வீச்சு நமது கண்களை அதிகம் பாதிக்கிறது.

இப்படி நமது கண்கள் பாதிக்கப்படுவதால் நமது கண்பார்வை குறைகிறது. அப்படி குறையும் கண்பார்வையை எப்படி அதிகரிப்பது என்பதற்கான டிப்ஸை பற்றி இன்றைய பதிவில் விரிவாக காணலாம்.

கண்பார்வை பன் மடங்கு அதிகரிக்க டிப்ஸ்:

இன்றைய காலகட்டத்தில் சிறியவர் முதல் பெரியவர் உள்ள பொதுவான பிரச்சனை என்றால் அது கண்பார்வை குறைபாடு தான். அதனை எப்படி போக்குவது என்பதற்கான டிப்ஸை பார்க்கலாம்.

டிப்ஸ் – 1

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. வெள்ளை மிளகுத்தூள் – 1 டேபிள் ஸ்பூன் 
  2. சோம்பு – 1 டீஸ்பூன் 
  3. பெரிய கற்கண்டு – 5
  4. பாதாம் – 10
  5. ஏலக்காய்த்தூள் – 1 டீஸ்பூன் 

செய்முறை :

ஸ்டேப் -1 

ஒரு மிக்சி ஜாரில் நாம் எடுத்து வைத்திருந்த 1 டேபிள் ஸ்பூன் வெள்ளை மிளகுத்தூள், 1 டீஸ்பூன் சோம்பு, 5 பெரியக்கற்கண்டு மற்றும் 1 டீஸ்பூன் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.

ஸ்டேப் -2

பிறகு அதனுடன் நாம் எடுத்து வைத்திருந்த 10 பாதாம் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து அதனை ஒரு காற்றுப்புகாத ஒரு மூடிபோட்ட பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்கள்.

தினமும் இரவு தூங்க செல்வதற்கு முன்பு இந்த பொடியை 1 டேபிள் ஸ்பூன் பாலுடன் கலந்து குடித்து வாருங்கள் உங்கள் கண்பார்வை பன்மடங்கு அதிகரிப்பதை நீங்களே காணலாம்.

டிப்ஸ் – 2 

முதலில் இந்த டிப்ஸிற்கு தேவையான பொருட்களை பார்க்கலாம்.

  1. மணத்தக்காளி இலை – 1 கைப்பிடி அளவு 
  2. நல்லெண்ணெய் – 200 மி.லி
  3. வெந்தயம் – 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

ஸ்டேப் -1 

முதலில் நாம் எடுத்து வைத்திருந்த மணத்தக்காளி இலையை ஒரு மிக்சி ஜாரில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்னர் அதிலிருந்து சாற்றை மட்டும் வடிக்கட்டி எடுத்துக் கொள்ளவும்.

ஸ்டேப் -2 

பின்னர் அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து அதில் 200 மி.லி நல்லெண்ணெயை  ஊற்றி நன்கு சூடுபடுத்தவும். பிறகு அதில் நாம் பிழிந்து வைத்திருந்த மணத்தக்காளி சாற்றை ஊற்றவும்.

அதனுடன் 1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் கொள்ளவும். பிறகு அதனை அடுப்பிலிருந்து இறக்கி அது சூடு ஆறியவுடன்  வடிக்கட்டி ஒரு கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றி வைத்துக் கொள்ளவும்.

இந்த எண்ணெயை வாரத்திற்கு இரு முறை தலையில் தடவி தலைக் குளித்து வருவதால் உங்கள் கண்பார்வை பன்மடங்கு அதிகரிப்பதை நீங்களே காணலாம்.

 கண்பார்வை 10 மடங்கு அதிகரிக்க இந்த 2 டிப்ஸ் போதும்

மேலும் இது போன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்👉👉 Tips in Tamil
Advertisement