கற்பூரத்தை வைத்து இவ்வளவு செய்யலாமா?
நண்பர்களே வணக்கம் இன்றைய பதிவில் அனைவருக்குமே பயனுள்ள தகவலை சொல்வதில் கொஞ்சம் மகிழ்ச்சி தான் எனக்கு..! ஆனாலும் இதைஅனைத்தையும் செய்து பார்த்து பயன்பெறுவீர்கள் என்ற நம்பிக்கையில் இன்றைய பதிவிற்குள் செல்லாமம். பொதுவாக கற்பூரம் என்றால் மனதிற்குள் ஒரு பக்தி தோன்றும் அப்படி இருக்கும்பட்சத்தில் அது பல் வலியை குணப்படுத்தும். அது மட்டுமில்லாமல் அத்தியாவசிய தேவையை அழகாக பூர்த்தி செய்யுமாம் இது யாருக்கு தெரியும் வாங்க அதனை தெரிந்துகொள்ளலாம்.
கற்பூரத்தை வைத்து இவ்வளவு செய்யலாமா?
டிப்ஸ் – 1
ஒரு 3 கற்பூரம் எடுத்து அதனை தனியாக பவுடர் போல் நுனிக்கி கொண்டு அதில் ஒரு ஸ்பூன் நெய் கலந்து அப்படியே சிறிது நேரம் கலந்துகொண்டு நெற்றியில் தேய்த்தால் தலை வலி குணமாகும். இதை அதிகம் செய்து வைத்துத்துக்கொள்ளாமல் தேவைப்படும் போது மட்டும் செய்து நெற்றியில் தேய்த்துக்கொள்ளலாம் தலை வலி குணமாகும்.
டிப்ஸ் – 2
3 மூன்று அல்லது 2 இரண்டு கற்பூரத்தை எடுத்து பவுடராக நுனிக்கு அதனை தனியாக வைத்துவிட்டு 1 ஸ்பூன் மிளகு தூள் எடுத்து ஒரு துணியில் கட்டி வீட்டில் அரிசி வைத்திருக்கும் பாத்திரத்தில் போட்டு வைத்தால் அரிசி நீண்ட நாட்கள் வரை கெடாது, அதேபோல் வண்டு வராது.
டிப்ஸ் – 3
ஒரு துணியை எடுத்துக்கொள்ளவும் அதன் பின் ஒரு வாளியில் தண்ணீர் எடுத்துக்கொண்டு தேவையான அளவு கற்பூரம் எடுத்துக்கொண்டு அந்த தண்ணீரில் கலந்துகொண்டு துணியில் நனைத்துவிட்டு ஓடுகள் இருக்கும் இடத்தில் துணியை வைத்து துடைத்துவிட்டாள் பூச்சிகள் வராது. கிருமிகள் வராது. ஒட்டடை அடையாது அது மட்டுமில்லாமல் வீடே நறுமணம் வீசும் சிலந்தி பூச்சிகள் வாராது.
டிப்ஸ் – 4
ஒரு டிஸ்யு பேப்பரை எடுத்துக்கொண்டு அதில் கற்பூரத்தை பவுடராகவோ அல்லது முழுசாகவோ வைத்து மடித்து அதனை அப்படியே பீரோவில் வைத்து விட்டால் கரப்பாம்பூச்சி வராது துணிகளில் நறுமணம் வீசும் இதனால் உங்களுக்கு கேடு தரும் அந்துருண்டை தேவைப்படாது.
வீட்டில் விளக்கு ஏற்றும் போது அதற்கு திரி வாங்கினால் அதில் விளக்கு ஏற்றும் போது உடனே எரியாது அது உடனே எரிவதற்கு திரினுள் வாங்கி கற்பூரம் இருக்கும் டப்பாவில் போட்டு வந்தால் விளக்கு ஏற்றும் போது உடனே எரியும்.
யார் வீட்டில் அந்துருண்டை பயன்படுத்துவீர்கள்..!
தினமும் முகத்திற்கு பயன்படுத்தும் பவுடரை வைத்து இவ்வளவு விஷயம் செய்யலாமா?
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |