Keerai Vadamal Iruka Tips in Tamil
கீரை நமது உடலுக்கு பல நன்மைகளை அளிப்பதால் அதனை வாரம் 2 அல்லது 3 முறை சாப்பிட வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி பார்த்தால் எல்லாருக்கும் எல்லா வகையான கீரைகளும் பிடிப்பது இல்லை. முருங்கை கீரை, முளைக்கீரை, தண்டு கீரை, பசலிக்கீரை, ஊசிப்பாலை கீரை என இவ்வாறு இருக்கும் வகைகளில் ஏதாவது ஒன்றை தான் விரும்புகிறார்கள். அந்த வகையில் முருங்கை கீரையினை மரத்தில் பறித்து அப்படியே சமைத்து விடலாம். ஆனால் மற்ற கீரை வகைகளை நாம் அவ்வாறு சமைக்க முடியாது. ஏனென்றால் மற்ற கீரை வகைகளை எல்லாம் கடையில் முதல் நாள் இரவு அல்லது மறுநாள் காலையில் தான் வாங்கி வந்து சமைக்க முடியும். ஒருவேளை இவ்வாறு வாங்கி வந்த கீரைகளை சமைக்க முடியாமல் போய்விட்டால் அது வாடி வீணாகி விடும். அதனால் இன்று 4 நாட்கள் வரை கீரை வாடாமல் என்றும் பிரஷாக இருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம் வாங்க..!
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl |
கீரை வாடாமல் இருக்க டிப்ஸ்:
டிப்ஸ்: 1
நீங்கள் வாங்கி வந்த எந்த கீரையாக இருந்தாலும் அது வாடாமல் இருக்க வேண்டும் என்றால் முதலில் ஒரு காட்டன் துணியை எடுத்துக்கொண்டு அதனை தண்ணீரில் நனைத்து கொள்ளுங்கள்.
பிறகு அந்த துணியில் கீரை கட்டினை வைத்து நன்றாக சுத்தி அப்படியே வைத்து விடுங்கள். இவ்வாறு செய்வதன் மூலம் துணியில் இருக்கும் ஈரப்பதம் கீரைக்கு என்று கீரையினை வாடாமல் பார்த்துக்கொள்ளும். மேலும் ஈரம் அதிகமாக இல்லாமல் சுமாராக இருக்குமாறு பார்த்துக்கொள்வது நல்லது.
டிப்ஸ்: 2
- சில்வர் பாத்திரம்- 1
- நியூஸ் பேப்பர்- தேவையான அளவு
- கீரை கட்டு- 1
பின்பு கீரை கட்டில் இருக்கும் கயிற்றை நறுக்கி விட்டு அதன் கீழே இருக்கும் வேர் பகுதியினையும் நறுக்கி விட்டு விடுங்கள். இப்போது ஒரு சில்வர் டப்பாவில் ஒரு நியூஸ் பேப்பரை வைத்து அதில் வேர் நறுக்கிய கீரையை வைத்து அதன் மேலே மற்றொரு நியூஸ் பேப்பரை சேர்த்து மூடி விட்டு அந்த பாத்திரத்திற்கான மூடியினை போட்டு மூடி வைத்து விடுங்கள் கீரை வாடாமல் அப்படியே இருக்கும்.
டிப்ஸ்: 3
அதேபோல் கீரையை வாங்கி வந்தவுடன் அதற்கு மேலே தண்ணீர் தெளித்து கொள்ளுங்கள். பின்பு ஒரு பிளாஸ்டிக் பாத்திரத்தின் மேலே அதனை வைத்து விடுங்கள். இவ்வாறு தண்ணீர் தெளித்து காற்று ஓட்டமாக வைப்பதன் மூலம் நீண்ட வரை கீரை வாடாமல் அப்படியே இருக்கும்.
மேலும் இது போன்ற டிப்ஸினை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் | Tips |