மூன்று நாட்கள் ஆனாலும் கீரை வதங்காமல் இருக்க இந்த டிப்ஸை Follow பண்ணுங்க

Advertisement

கீரை கெட்டு போகாமல் இருக்க என்ன செய்வது.?

வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் கீரை கெடாமல் இருக்க என்ன செய்வது என்று தெரிந்துகொள்வோம். பிரிட்ஜ் இருக்கின்ற வீட்டில் கீரையை பிரிஜில் வைத்துவிடுவார்கள். எவ்வளவு தான் Technology உயர்ந்தாலும் இன்னும் சிலர் வீட்டில் பிரிட்ஜ் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் வீட்டில் எல்லாம் என்ன செய்வார்கள். வாங்க பிரிட்ஜில் வைக்காமலே கீரையை மூன்று வரையிலும் பாதுகாப்பாக எப்படி வைப்பது என்று இந்த பதிவில் படித்து தெரிந்துகொள்வோம் வாங்க..

இதையும் படியுங்கள் ⇒பசு மாட்டிற்கு அகத்திக்கீரை கொடுப்பது ஏன் தெரியுமா?

ஒரு நாள் கீரை கெட்டு போகாமல் இருக்க:

நீங்கள் கீரையை வாங்கிட்டு வந்தவுடன் சமைத்தால் ஒரு பிரச்சனையும் இல்லை. அதுவே மறுநாள் சமைக்க வேண்டிய கட்டாயம் வரும் போது என்ன செய்வது என்று தெரியவில்லையா..? இனிமேல் இப்படி செய்யுங்க..!

முதலில் கீரையை எடுத்து கொள்ளவும். அந்த கீரை முழுவதும் ஒரு காட்டன் துணியை சுத்தி கொள்ளவும். அந்த காட்டன் துணியானது ஈரமாக இருக்க வேண்டும். துணி ஈரமாக இருப்பதால் கீரை கெட்டு போகாது.

மூன்று நாட்கள் கீரை கெட்டு போகாமல் இருக்க:

டிப்ஸ்:1

முதலில் கீரையில் உள்ள வேர்களை நீக்கவும். பின் அந்த கீரையில் உள்ள தேவையில்லாத செடிகளை நீக்கவும். பின் ஒரு காட்டன் துணியை நனைத்து கொள்ளுங்கள். இந்த ஈர துணியில் கீரையை வைக்கவும். பின் அந்த துணியை முழுவதும் கீரையுடன் சுருட்டி கொள்ளுங்கள். துணியின் ஈரம் காய காய தண்ணீர் தெளித்து கொண்டே இருங்கள். முக்கியமானது கீரையை காற்றோட்டமான பகுதியில், அதிக வெப்பம் உள்ள இடத்திலும் வைக்க கூடாது.

டிப்ஸ்:2

கீரையின் வேர் பகுதியை நறுக்கி கொள்ளுங்கள். பின் ஒரு சில்வர் பாத்திரம் எடுத்து கொள்ள வேண்டும். பின் கீரையின் அடிப்பகுதியை பாத்திரத்தின் கீழ் படும்படி வைக்க வேண்டும். பாத்திரத்தின்  அடியில் சிறிதளவு தண்ணீர் ஊற்ற வேண்டும் இல்லையென்றால் ஈர துணியை கீரையின் மேல் வைக்கலாம்.

டிப்ஸ்:3

வீட்டில் சாக்கு பை இருந்தால் எடுத்து கொள்ளுங்கள். அந்த சாக்கு பையை நனைத்து பிழிந்து விடுங்கள். பிறகு கீரையை அந்த ஈர சாக்கில் வைத்து சுற்றி வையுங்கள். இப்படி வைத்தால் ஒரு வாரம் ஆனாலும் கீரை கெடாமல் இருக்கும்.

மேல் கூறப்பட்டுள்ள குறிப்பை கீரைக்கு மட்டுமில்லை கறிவேப்பிலை. புதினா, கொத்தமல்லி போன்றவற்றையும் கெடாமல் இருக்க இந்த முறையை பயன்படுத்தலாம்.

இதுபோன்ற டிப்ஸ்களை பற்றி தெரிந்துகொள்ள  இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> Tips 

 

Advertisement